நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில், வாகனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும், எரிபொருள் தாங்கிகளுக்கும், இலங்கை மண்ணெண்ணையை மொத்தமாக விநியோகிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாடு முழுவதிலும் உள்ள நிரப்பு நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் இலங்கை மண்ணெண்ணைய்யின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், பேருந்துகளும், எரிபொருள் தாங்கிகளும் மண்ணெண்ணை பயன்படுத்துவதோடு, டீசலுடன் மண்ணெண்ணை கலப்பதற்கும் வழிவகுத்துள்ளது. இது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வட மத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யலாம் என மேற்படி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலும் பனிப்பொழிவு நிலவிவரும் நிலையில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் 22 பாகை செல்சியஸ் வெப்ப நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மாவட்டத்தின் வழமையான சராசரி வெப்ப நிலை 35/27 பாகை செல்சியஸ் எனும் நிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நேற்று 21/01/2018 திருகோணமலை பாளையூட்டுப் பகுதியில் முச்சக்கரவண்டியொன்றில் மீத்தம்பேட்டமைன் போதை மாத்திரைகளைப் பரிமாறிக்கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு திருகோணமலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கைக் கடற்பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் தமது கடற்படை எந்த நேரமும் விழிப்புடன் செயற்படுவதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட சிங்கள மாணவர்கள்  இருவருக்கும் 3ஆம் வருட சிங்கள மாணவர்கள்  இருவருக்கும் கடந்த வியாழக்கிழமை இரவு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வைத்து தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார், தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் 4 சிங்கள மாணவர்களைக் கைது செய்தனர்.

அவர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையேயான மோதல்கள் தற்போது அதிகரித்து வருவதால், விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் 4 மாணவர்களையும் வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

மாசிக்கருவாடு, செத்தல்மிளகாய் உள்ளிட்ட பலசரக்கு வகைகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக பொருட்களுக்கான வரியை நடைமுறைப்படுத்தும் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை மாத்திரமே சம்பந்தப்பட்ட வர்த்தகமானி அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“2007ஆம் ஆண்டு இலக்கம் 48இன் கீழான வீசேட வர்ததக பொருட்கள் வரி சட்டத்தில் உள்ள விதிமுறைகள் மாத்திரம் பொருட்களுக்கான இந்த வரி விதிக்கப்படவேண்டிய வரி அறவிடப்படும் உரிய கால எல்லை வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரிமாதம் 18ஆம் திகதி அன்று இலக்கம் 2054/40 கீழான வர்த்தமான அறிவிப்பின் மூலம் மாசிக்கருவாடு உள்ளிட்ட சில பொருட்கள் மீது 2017 ஜுலை 19ஆம் திகதி அன்று இலக்கம் 2028/44 என்று குறிப்பிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்டிருந்த வரி விகிதாசாரம் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படுள்ளது.

இதற்கமைவாக வர்த்தகமானி அறிவிப்பின் மூலம் பொருட்கள் வரி அதிகரிக்கப்படமாட்டாது. அத்துடன் எதிர்வரும் 6 மாத காலப்பகுதிக்கு நிலவும் விலைகளுக்கு அமைய இந்த பொருட்களை நுகர்வோர் கொள்வனவு செய்யமுடியும்.” என்று உள்ளது.

வவுனியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், மற்றும் முப்படையினருக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று(22) இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான வாக்குப்பதிவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்திலும் பொலிஸாருக்கான வாக்குப்பதிவு வவனியா பொலிஸ் நிலையத்திலும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் மாவட்ட செயலகப்பகுதியில் கேட்போர் கூடப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் வாக்களிப்பதற்காக காத்திருந்தமை மற்றும் பொலிஸ் நிலையத்தில் காத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களையும் படம் பிடிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

2017/2018 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

விண்ணப்ப படிவங்களை அனுப்பிவைப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஆகும் என்றும், விண்ணப்பப்படிவங்கள் இணையத்தளத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கைப் பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கான வழிகாட்டி மற்றும் ஆசிரியர்களுக்கான கைநூல் தற்போது பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் தெரிவித்த கல்வி வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாளிக்கா தரம் மூன்றிற்கான ஆசிரியர் கைநூலும் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றார். இதன்படி விநியோகிக்கப்பட்ட இந்த கைநூல்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டுள்ளதாக கூறினார்.

 

பெங்களுரில் அமைந்துள்ள பெல்லந்தூர் ஏரியில் அதிக அளவில் ரசாயனக் கழிவுகள் கலப்பதன் காரணமாக அங்குள்ள நீர்ப்பகுதியில் நேற்று மீண்டும் தீப்பிடித்ததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

பெங்களூரின் தென்கிழக்கு பகுதியான பெல்லந்தூரில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் பெங்களூரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவிலான ரசாயனக் கழிவுகள் கலப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு ரசாயனக் கழிவுகள் கலப்பதால், அந்த ஏரியில் கடந்த ஆண்டு தீப்பிடித்தது. கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதில் ஏரியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், பெல்லந்தூர் ஏரியில் நேற்று காலை 10 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தீ கொழுந்துவிட்டு எரிவதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஏரியின் நடுப்பகுதியில் தீப்பிடித்துள்ளதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தொடர்கிறது. அதிக அளவிலான ரசாயனக் கலப்பு காரணமாக மீத்தேன் வெடிப்பு ஏற்பட்டு ஏரியில் தீப்பிடித்திருக்கலாம் என்று சுற்றுப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஹரியாணாவில் 12-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் பள்ளித் தலைமையாசிரியர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில், “ஹரியாணாவின்  யமுனா நகரிலுள்ள பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார் ரித்து. இவர் இன்று (சனிக்கிழமை) காலை 11.30 மணியளவில் தனது அலுவலகத்தில் அமர்திருக்கும்போது அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவரை நான்கு முறை துப்பாக்கியால்  சுட்டுள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரித்து சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். துப்பாக்கியால் சுட்ட மாணவனை போலீஸார் கைது செய்துள்ளர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் அதே பள்ளியில் பயிலும் மாணவனால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஹரியாணாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.