Authors Posts by Nithiyaraj

Nithiyaraj

12428 POSTS 0 COMMENTS

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுதினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இன்று இடம்பெறவுள்ளது.

1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.

இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டுள்ளது.

யாழ்.- கண்டி நெடுஞ்சாலையில் கொக்காவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹையேஸ் வாகனம் ஒன்று, பழுதடைந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரஊர்தி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Image may contain: 1 person, standing and outdoor

பழைய முறிகண்டி, 18ஆம் மைல்கல் பகுதியில் நேற்றிரவு 8.35 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

kokkavil accident (1)kokkavil accident (2)

kokkavil accident (3)

இதில், ஹையேஸ் வாகனம் முற்றாக உருக்குலைந்து போனதுடன், அதில் பயணம் செய்த நான்கு பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உயிரிழந்தவர்கள் இளைஞர்கள் என்றும், வடமராட்சி- நெல்லியடியைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கம் எனக்கு உல்லாச பங்களா வழங்கியதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் அப்பட்டமான பொய்யை சொல்கிறார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு அண்மையில் நடைபெற்றது. இதன்போது பேசிய சுரேஸ் பிறேமச்சந்திரன், அரசாங்கத்துடன் இணங்கி செயற்பட்டமைக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே நன்மைகளைப் பெற்றிருக்கின்றார்கள்.

ஆனால், தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு கொழும்பு 7ல் உல்லாச பங்களா வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறேன் எனவும் கூறியிருந்தார்.

இந்த கருத்தை இன்று பருத்துறையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சுமந்திரன் மறுத்து பேசியிருக்கிறார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், கொழும்பில் ஒரு விலாசத்தை சொல்லி அந்த விலாசத்தில் எனக்கு ஒரு பங்களா வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு 135 ரூபாய் வாடகை எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியிருக்கின்றார். அந்த கருத்து அப்பட்டமான பொய்.

அவர் கூறியிருக்கும் அந்த விலாசத்தில் பங்களாவே இல்லை. அவ்வாறு பொய்யான ஒரு கருத்தை ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்து முதல் பக்கத்தில் செய்தியாக பிரசுரித்திருக்கின்றது.

இவ்வாறே எமக்கு எதிரான பொய்கள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன என அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 இந்திய பிரஜைகள் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆறு மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் கடவுச்சீட்டுக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஒன்ராறியோ மாகாணங்கள் நேற்று வரலாறு காணாத கடும் குளிரை எதிர்கொண்டிருந்தன. ரொறன்ரோ மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களில் இன்றும் -35 செல்சியஸில் இருந்து -40 செல்லியஸ் வரை குளிர் காலநிலை ஏற்படும் என்றும் பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் குளிர் காற்றுடன் கூடிய வெப்பநிலை உணரப்படும் என்று கனேடிய சுற்றுச்சூழல் அமைப்பு விசேட காலநிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இக்காலநிலையானது நாளையுடன் மாற்றமடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 59-வருடங்களிற்கு முன்னய வெப்பநிலை சாதனையை முறியடித்து ரொறொன்ரோவில் இன்றய தேதியில் ஆழமான மற்றும் கொடூரமான குளிர் தொடர்கின்றது.

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 6-மணியளவில் வெப்பநிலை – 23 C ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 1959ல் காணப்பட்ட – 20. 6 C சாதனையை இன்றைய பதிவு முறியடித்துள்ளது. குளிர் காற்றுடன் கூடிய வெப்பநிலை இன்று இரவு பூராகவும் மிகுந்த குளிருடன் – 34 ஆக உணரப்படும்.

Image result for வரலாறு காணாத குளிரில் கனடா

நிலைமை விரைவில் எந்த நேரத்திலும் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படவில்லை எனவும் அறியப்படுகின்றது.இன்று பகல் உயர் நிலை – 16 C ஆக உயரும். இரவு – 25 C ஆகும். இருந்தும் குளிர்விக்கும் காற்று – 36ஆக உணர வைக்கும் என கனடா சுற்று சூழல் அறிவிக்கின்றது. சனிக்கிழமை பகல் நேரம் அதி உயர் – 17 C மற்றும் இரவு பூராகவும் – 23 C.ஆக இருக்கும் என வானிலை ஏஜன்சி தெரிவிக்கின்றது.

கனடா சுற்று சூழல் பிரிவினரால் வியாழக்கிழமை விடுக்கப்பட்ட அதி தீவிர குளிர் எச்சரிக்கை நடை முறையில் இருக்கும் எனவும் டிசம்பர் 25ல் ரொறொன்ரோ மருத்துவ அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட அதி தீவிர குளிர் வானிலை எச்சரிக்கையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related image

உலக காற்பந்தாட்ட அணிகளுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பினை தமிழீழ ஈழ அணி ஒன்று பெற்றுள்ளது.

ConIFA உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டித்தொடரில் தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி ஒன்று விளையாடி வருகின்றது.

இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் எல்லாளன் வன்னின் என்ற தமிழீழ காற்பந்தாட்ட அணி போட்டியிட்டுள்ளது.

லண்டனில் உள்ள சோமாலியா புலம்பெயர்ந்தோர் அணியான Barawaவுக்கும், கனடா, லண்டன் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களை கொண்ட தமிழீழ அணியும் போட்டியிட்டுள்ளது.

இந்தப் போட்டி இன்று வடக்கு சைப்ரசில் நடைபெற்றுள்ளது.. எனினும் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் லண்டனில் காற்பந்தாட்ட போட்டித் தொடர் ஒன்று நடைபெறவுள்ளது. இதிலும் ஈழ காற்பந்தாட்ட அணி பங்கேற்கவுள்ளது.

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, இந்தியாவின் வெளியகப் புலனாய்வு முகவரமைப்பான றோவின் முன்னாள் தலைவரான ரஜிந்தர் கன்னா, நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த, இந்திய வெளிவிவகாரச் சேவையின் முன்னாள் அதிகாரி அரவிந்த் குப்தா கடந்த ஓகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற பின்னர், வெற்றிடமாக இருந்த இந்தப் பதவிக்கே, ரஜிந்தர் கன்னா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜிந்தர் கன்னா, 1978ஆம் ஆண்டு றோவில் இணைந்து கொண்டார். பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக இவரது கண்காணிப்பில் பல தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஒப்பந்த அடிப்படையில் இவரை பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு முடிவு செய்துள்ளது. எனினும் இவரது பணிக்காலம் அறிவிக்கப்படவில்லை.

ரஜிந்தர் கன்னா தற்போது, தேசிய பாதுகாப்புச் சபை செயலகத்தின், அயல்நாடுகள் கற்கைகள் பிரிவில் சிறப்பு பணி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

அவரது தலைமையின் கீழேயே, சிறிலங்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் தொடர்பான, கொள்கை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், புலனாய்வு அமைப்புகளின் தலைவர் பதவியில் இருந்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

பாகிஸ்தான் தூதுவரை படுகொலை செய்யும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை வழக்கில் இருந்து விடுவிக்க  கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு பாகிஸ்தான் தூதுவரைப் படுகொலை செய்ய மேற்கொண்ட முயற்சியுடன் தொடர்புடையவர் என்று முச்சக்கர வண்டி உரிமையாளரான பாலகிருஷ்ணன் பாலசுந்தரம் மனோகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் நாள் பாகிஸ்தான் தூதுவரை இலக்கு வைத்து கொள்ளுப்பிட்டியில்  நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலுக்கான முச்சக்கர வண்டியை இவர் வழங்கினார் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 29ஆம் நாள் இவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பாலகிருஷ்ணன் பாலசுந்தரம் மனோகரன் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அரச சட்டவாளர்கள் தவறி விட்டதால், நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான், இவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 321 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை, கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க அவரிடம் தமது பிள்ளைகள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த ஹரி ஆனந்தசங்கரி. காணாமல் ஆக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக தான் இன்று இங்கு வந்ததாகவும், கடந்த காலங்களை போன்றே காணப்படுவதாகவும், எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வந்த தான் கனேடிய உயர்ஸ்தானிகருடன் தங்க கிடைத்ததாகவும், அதன் விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். இலங்கை பிரச்சினை விடயம் தொடர்பில் கனடா இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பது தொடர்பிலும் அவர் இதன்போது தெரிவித்தார்.

சிறீலங்கா அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான ‘ரூபவாகினி’ தொலைக்காட்சியினர் கனடாவுக்கு வருவதைத் தமிழ்த்தாய் மன்றம் மற்றும் மூதறிஞர் கந்தமுருகேசனார் பண்பாட்டு அமைப்பு ஆகியன வன்மையாக எதிர்க்கின்றன.

இவ்விடையம் குறித்து கடந்த 31.12.2017 அன்று ரொரன்ரோவில் ஊடச் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இவ்வமைப்பின் பிரதிநிதிகள் ஊடகவிலயாளர்களைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அவ்வறிக்கை வருமாறு.

பௌத்த சிங்களப்பேரினவாத சிறீலங்கா அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான ‘ரூபவாகினி’ தொலைக்காட்சியினர் கனடாவுக்கு வருவதைத் தமிழ்த்தாய் மன்றம் வன்மையாக எதிர்க்கின்றது. இவ்விடயத்தில் ஒட்டுமொத்த கனடா வாழ் தமிழர்களின் உணர்வு வெளிப்பாட்டினை தமிழ்த்தாய் மன்றம் எதிரொலித்து நிற்கிறது எனலாம்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழிப்புக்குத் துணைநின்றது மட்டுமல்லாமல் அந்த இன அழிப்பினை பயங்கரவாதத்துக் எதிரான போராக சித்தரித்து, எம்மக்களின் இழப்பினை, வலிகளை மூடி மறைத்து, பௌத்த சிங்களப் பேரினவாதத்துக்குத் தூபமிட்டு, அதன் இனவாத அரசியலுக்குத்துணை நின்று உலகின் கண்களிலிருந்து உண்மைக்குற்றவாளிகளை மூடிமறைத்ததன் மூலம் ரூபவாகினி தொலைக்காட்சி தமிழினப்படுகொலையில் பங்கெடுத்த பங்காளியும் ஆகிறது. எனவே இத்தொலைக்காட்சிக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்துவது எமது கடமை ஆகிறது.

தமிழர் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் கடலெனத் திரண்ட மக்களால் மிகவும் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. காணாமல் போனார் உறவுகள் தொடர்ந்து சுழல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நடத்தியபடியே உள்ளார்கள். அரசியல் கைதிகள், காணி ஆக்கிரமிப்பு இவற்றுக்கு எதிரான போராட்டங்களும் தொடர்ந்து நிகழ்ந்தபடியே உள்ளன. அந்நிகழ்வுகள் குறித்து மட்டும் கள்ள மௌனம் சாதித்தபடி இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து கனடா வந்து பொங்கல் விழாவினைப் படம் பிடிப்பதானது இவர்களின் வருகைக்குப் பின்னால் இருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலின் நிகழ்ச்சி நிரலினை புடம்போட்டுக் காட்டுகிறது.

தமிழ் – சிங்கள நல்லிணக்கம் எனும் போர்வையில் இதன் உள்ளே ஒளிந்திருக்கும் அரசியல் ஆதாயம் குறித்துக் கனடா வாழ் தமிழ் உறவுகள் விழிப்படைய வேண்டும். இத்தகைய அரசியலுக்குத் துணைபோவதென்பது ஒத்தோடித்தனம். இவ் ஒத்தோடித்தனம் கண்டிக்கப்படவேண்டியது. ரூபவாகினி தொலைக்காட்சி ஒரு ஊடகமாகவே தமது பொங்கல் விழாவில் கலந்துகொள்கிறது என்று முதலில் சொன்னவர்கள் சிறீலங்கா அரசால் முன்மொழியப்பட்ட சாசன வரைவின் வெற்றிக்கு சகல இன மக்களின் ஒத்துழைப்பும் தேவையாகையால் நாடு தழுவிய பரப்புரைகள் அவசியம் எனப்பட்டதன் உணர்வே இந்த ரூபவாகினி விடயம் என்று இன்று தாங்களாகவே ஒத்துக்கொண்டார்கள். இது இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ள நிகழ்ச்சி நிரல்.

கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் கனடியத் தமிழர் பேரவை என்ற கனடியத் தமிழ் காங்கிரசு அமைப்பு சிங்கள அரச பயங்கரவாதத்தின் சதிவலையில் சிக்கிக்கொண்டதையே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்தியம்புகின்றன.

இதுவரை 400,000க்கும் அதிகமான அப்பாவித்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இறுதிப்போரில் மட்டும் 90, 000 தமிழ்ப்பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டனர். இந்த அரச பயங்கரவாதச் செயல்களை எல்லாம் மூடிமறைத்து பொய்யான தகவல்களை உலகுக்கு வழங்கிய அரச ஊதுகுழலான ரூபவாகினியின் கையில் படிந்துள்ளது எம் இனத்தின் இரத்தக் கறை.

இன அழிப்பின் பங்குதாரர்களாகிய ரூபவாகினி தொலைக்காட்சியின் கனடா வருகையை எதிர்க்காவிடின் எமது மக்களை இனவழிப்புச் செய்த கொடுங்கோலரசின் கொடுமைகளை நாம் ஏற்றுக்கொண்டவர்களாகிறோம்

ஆகவே 146, 000 தமிழர்களின் இறப்பை சிங்கள தேசத்தின் வெற்றியாகக் கொண்டாடிய இனவாத ஊடகமான ரூபவாகினியின் வருகையானது இவ்வின அழிப்பினைச்செய்து கொண்டாடிய மகிந்த, கோத்தபாய, சரத் பொன்சேகா போன்றவர்களின் வருகை போன்றதே.

சிறீலங்கா அரச பயங்கரவாதத்துக்குப் பலியான எமது அன்புக்கினிய மக்களுக்கான நீதிக்குக் குரல்கொடுப்போம்! தமிழீழ விடுதலைக்கு தமது விலைமதிப்பற்ற உயிர்களைக்கொடுத்த 60 000க்கும் மேற்பட்ட எம் மாவீரர்களின் உணர்வுகளுக்கு என்றும் உண்மையாக இருப்போம்! பௌத்த சிங்களப் பேரினவாத அடிவருடிகளின் கனவை தவிடுபொடியாக்குவோம்.’ என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.