தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ஹம் ஒலி எங்கிருந்து வருகிறது – காரணம் என்ன?

உலகின் சில பகுதிகளில், மிகவும் குறைந்த அலைவரிசை கொண்ட ஓர் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதுதான், ஹம் என குறிப்பிடப்படும், 1993 ல் விமர்சிக்கப்பட்ட ஒரு விநோத ஒலி. நியூ மெக்ஸிகோவின் டுவோ தேசத்தில் இந்த ஒலி உணரப்பட்டது. இந்த விநோத இரைச்சல் எல்லோருக்கும் கேட்கவில்லை. இந்த விநோத ஒலி கனடா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, நியூமெக்சிகோ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிலருக்கு மட்டும் கேட்கிறது. உலக மொத்த மக்கள்தொகையில் 2 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்த ஒலி கேட்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும் இந்த ...

புதிய அம்சங்களுடன் வெளியாகிறது சாம்சங் ஏ 8+

சாம்சங் : ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கிற போதிலும், வாடிக்கையாளர்களின் பெறுமதிப்பினையும், அவர்களின் ஆதரவினையும் பெற்றுள்ள ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் சாம்சங் என்றால் அது மிகையில்லை. அத்தகைய சாம்சங் நிறுவனம், தற்போது புதிய தயாரிப்பான சாம்சங் ஏ 8+ ஸ்மார்ட்போனை இம்மாதம் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. புத்தாண்டில் சாம்சங் நிறுவனம் வெளியிடும் முதல் ஸ்மார்ட்போன் சாம்சங் ஏ 8+ ஆகும். சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பினால் மகிழ்ச்சியில் ...

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மூலம் இயங்கும் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன்

ஹவாய் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போனை லண்டனில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் 8ம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த வாரம் முதல் சீனாவில் மட்டுமே கிடைக்கிறது. ஹவாய் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் EUR 499 (சுமார் ரூ.38,000) மற்றும் GBP 449 (சுமார் ரூ.38,900) விலையிலும் கிடைக்கும். ஜனவரி 8ம் தேதி முதல் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த ஸ்மார்ட்ப...

மொழி பெயர்க்கும் திறன் கொண்ட, ‘பிக்செல் பட்ஸ்

மென்பொருள், வன்பொருள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்தால், போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ள முடியும் என, ‘கூகுள்’ நினைக்கிறது. அதற்கான முதல் படியாக, ‘பிக்செல் பட்ஸ்’ என்ற காதணி ஒலிபெருக்கியை, ‘கூகுள்’ வெளியிட்டிருக்கிறது. இதன் விலை, 13,680 ரூபாய். இது, வெறும் ஒலிபெருக்கியல்ல. 40 மொழிகளில், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மொழி பெயர்க்கும் திறன் கொண்டது. ஆனால், இந்தத் திறன், பிக்செல் பட்சுக்குள் இல்லை. அதிதிறன் வாய்ந்த, செயற்கை நுண்ணறிவு மென்பொருளை கொண்டு இயங்கும், ‘கூகுள் டிரான்ஸ்லேட்’...

ஐபோன் 8 வெளியீட்டு விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ; வெளியானது ஐபோன் 10

அப்பிள் நிறுவனத்தின் 3 புதிய ஐபோன்கள், வோட்ச் 3, டி.வி 4 கே உள்ளிட்ட தயாரிப்புகள் உலக சந்தையிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன. உலகின் புகழ் பெற்ற நிறுவனமான அப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதைபோல் அடுத்த தலைமுறைக்கான புதிய தயாரிப்புகளை இன்று (அமெரிக்க நேரப்படி) வெளியிட்டது. இதையடுத்து அப்பிள் நிறுவனம் ஐ-போன் 8, 8 பிளஸ் மற்றும் ஐ- போன் எக்ஸ் என்ற புதிய ரக ஸ்மார்ட் போன்களை வெளியிட்டன. இந்த போன்களில் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வ...

இனிமேல் எக்ஸ்ரே, ஸ்கேனுக்கு அவசியம் இருக்காது: மருத்துவக் கெமரா வந்துவிட்டது

உடல் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்து, நோயின் தன்மையைக் கண்டறிய எக்ஸ்ரே, ஸ்கேன் ஆகியவற்றைத்தான் மருத்துவர்கள் நம்பியுள்ளனர். இந்த நடைமுறையால் நோயாளிகள் ஆயிரக்கணக்கில் செலவிடவேண்டியுள்ளது. இனிமேல், அதற்கு அவசியமின்றி, உடலை ஊடுருவிப் பார்த்து நோயின் தன்மையைக் கண்டறிய மருத்துவ கெமரா வந்து விட்டது. இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறியல் பேராசிரியரான விஞ்ஞானி கெவ் தாலிவால் தலைமையிலான குழு, இந்த கெமராவைக் கண்டுபிடித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவ் தாலிவால் கூறியி...

இதுவரை இனங்காணப்பட்டிராத 100 வரையான எரிமலைகள் கண்டுபிடிப்பு

எரிமலைகள் வெப்பமான பிரதேசத்தில் மட்டுமல்ல ஆழ் கடல்களிலும், பனிப்பிரதேசங்களிலும் காணப்படக்கூடிவை. இவ்வாறு அதிக குளிர் நிறந்து காணப்படும் அந்தாட்டிக்கா பகுதியில் இதுவரை இனங்காணப்படாத 138 வரையான எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பனிப் படலங்களுக்கு அடியில் மறைந்து காணப்பட்டுள்ளது. இவை அனைத்தும் செயற்பாட்டு நிலையில் உள்ளனவா என்பது தொடர்பில் சரியான தரவுகள் எதுவும் இல்லை எனவும் Edinburgh பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானியான Robert Bingham தெரிவித்துள்ளார். மேலும் இந்த எரிமலைகள் 100 மீற்றர...

குழந்தைகளை பாதிக்கும் பாலியல் தளங்களை தடை செய்யும் சாப்ட்வேர்

இண்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும் அதே நேரத்தில் பாலியல் தொடர்பான இணைய தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கணினி மற்றும் இண்டர்நெட்டால் நன்மைகள் பல இருந்தாலும் பெற்றோர்களை பெரிதும் வாட்டி எடுப்பது பாலியல் இணைய தளங்கள்தான். குழந்தைகள் இந்த இணைய தளங்களை பார்வையிடக் கூடாது என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவது இயல்பு. ஆனால் பலருக்கு இந்த தளங்கள் வராமல் எப்படி தடுப்பது என்று தெரியவில்லை. இணையத்தில் அதற்கு பல வழிகள் உள்ளன. இண்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும் அதே நேரத்தில் பாலிய...

கூகுளாலேயே இது முடியாதாம்!

பிரௌசரில் தப்பா டைப் பண்ணினாலும் அதற்கு ஒரு ரிசல்ட் காட்டுவதுதான் கூகுளின் ஸ்டைல். கடவுளிடம் கிடைக்காததுகூட கூகுளிடம் கிடைக்கும். அப்படிப்பட்ட கூகுளே ஒரு விஷயத்தில் கைவிரித்துவிட்டது. ஆம்! தன் ஊழியர்களின் சம்பள லிஸ்ட்டை தங்களால் வெளியிட முடியாது; அதற்கு நிறைய கால அவகாசமும், பணமும் செலவாகும் என்று ஒரு வழக்கிலிருந்து அப்ஸ்காண்டு ஆகிவிட்டது கூகுள். கூகுள் நிறுவனம், சிலிக்கான் வேலி எனும் பகுதியில் அமைந்திருக்கிறது. சமீப காலமாக சிலிக்கான் வேலியின் பெண்/ஆண் ஊழியர்களுக்கு இடையில் சம்பளப் பாகுபாடு இர...

ஆண்ட்ராய்டு நிறுவனரின் புதிய ஸ்மார்ட்போன்: மே 30-ந்தேதி வெளியாகிறது

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் இணை நிறுவனரான ஆண்டி ரூபின் தனது புதிய ஸ்மார்ட்போனினை மே 30-ந்தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இங்குதளத்தின் இணை நிறுவனரான ஆண்டி ரூபினின் எசென்ஷியல் பிராடக்ட்ஸ் இன்க் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனினை மே 30-ந்தேதி வெளியிட உள்ளதாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எசென்ஷியல் ப்ரோடக்ட்ஸ் ந...