செய்திகள் பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தை ஒற்றுமையாக நினைவு கூரவேண்டும் யாழ். பல்கலைக்கழக ஒன்றியம்

முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தை தாயகம் எங்கும் ஒற்றுமையாக நினைவு கூரவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மானுடத்தின் மதிப்பினைப் பேணிக்காப்பதில் அக்கறை கொண்டவர்களாக நாகரீமாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் உலக சமூகங்களின் மனச்சாட்சிக் கதவுகளை இறுக்கி மூடி வைத்தபடி, அவசர அவசரமாக இருபத்தோராம் நூற்றாண்டில் எல்லோர் முன்னிலையிலும் நடந்தேறிய, மறைக்கவும், மறக்கவும் முடியாத, மிகவும் கோரமாக நடத்...

காணாமல் போனோர் பணியக உறுப்பினர்கள் மே மாதம் வட-கிழக்கிற்கு வருவர்

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் மே மாத நடுப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். காணாமல் போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும், பிராந்திய அலுவலகங்களை அமைப்பது சம்பந்தமாக ஆராய்வதற்காகவுமே இவ்விஜயம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பயண நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரமளவில் அறிவிக்கப்படும் என்று பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் பணியகம் நிறுவப்பட்டுள்ளபோதிலும் அதன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இன்னும் ...

வலி. வடக்கில் மீள் குடி­யேற்­றத்­துக்கு தடை­யாக இரா­ணுவ முகாம்கள்

யாழ்ப்­பாணம் வலி. வடக்கில் மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்ட காணி­களில் மக்­க­ளது  மீள் குடி­யேற்­றத்­திற்கு இடை­யூ­றான வகை யில் மூன்று இரா­ணுவ முகாம்கள் காணப்­ப­டு­வ­தாக  மீள்­கு­டி­யேறும் மக்கள் தெரி­வித்­துள்­ளனர். குறித்த இரா­ணுவ முகாம்கள் காணப்­ப­டு­வ­தா­னது தமது மீள் குடி­யேற்­றத்­தினை மேற்­கொள்­வதில் பெரும் சிரம்­மா­க­வுள்­ள­தாக மீள் குடி­யே­றிய மக்­களும் விசனம் தெரி­வித்­துள்­ளனர். கடந்த 13ஆம் திகதி சித்­திரை புத்­தாண்டு தினத்­தன்று வலி வடக்கில் 683 ஏக்கர் காணிகள்  பொது மக்­க­ளிடம் மீள...

மன்னார் மாவட்டத்தில் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு வேற்றுமையே காரணம் – சாள்ஸ்

மன்னார் மாவட்டத்தில், கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. அம்மாவட்டத்தில் மூன்று சபைகளை இழந்தமை கவலைக்குரிய விடையம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “மன்னார் பிரதேச சபை மற்றும் மா...

வெலிக்கடை சிறைச்சாலையில் 27 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மார்ச்சில் விசாரணை

2012ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் 27 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பத்மன் சூரசேன மற்றும் நீதிபதி சிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத...

ஈழத்தமிழர் அரசியல் யதார்த்தம் எது? கூட்டமைப்பின் தலைவர்களுக்கு ஓர் வேண்டுகோள்

தற்போதய சூழலில் யதார்த்தம் என்ற பெயரில் இலங்கை அரசின் ஆக்கிரமிப்புக்குள் தமிழர் தாயகத்தை சிக்கவைக்கும் முயற்சிக்கு தமிழர் தலைமைகள் துணைபோவதை நாம் வேதனையுடன் அவதானிப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழர்களை அடிமைப்படுத்தும் முயற்சிக்குத் துணைபோக வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் அவர் விடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இங்கே 'யதார்த்தம்' என்ற சொல்லாடல் சமாகாலத்தில் தமிழ் ...

கழுத்து வெட்டுவேன் என்று சைகை காட்டிய சிறிலங்கா இராணுவ அதிகாரியை நாடு கடத்த ஏற்பாடு..

அமைதிவழியில் அறப்போராட்டம் நடத்திய தமிழர்களை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டி அச்சுறுத்தல் விடுத்துள்ளார். பிரிகேடியர் தரத்தில் உள்ள ராணுவ அதிகாரி என்றும். இவர் பெயர் பிரியங்க பெனாண்டோ என்று அறிகிறது. இந்த வீடியோவை  முதலில் வெளியிட்டதோடு, பிரித்தானிய காவல் துறை மற்றும் MPக்களுக்கு அனுப்பியும் இருந்தது. இன் நிலையில் லேபர் கட்சி MP சிபோன் மக்டொனாவும், நிழல் அமைச்சர் ஜோன் ரயன் ஆகியோர் உடனடியாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சரை தொடர்பு கொண்டுள்ளார்கள். பிரித்தானிய விசாவில் வந்துள்...

சிறிலங்கா அரசாங்கம் கேட்டது 12,000 மில்லியன் ரூபா – கிடைத்தது 2,500 மில்லியன் ரூபா

சிறிலங்கா அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாணசபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “2016ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபை  12,000 மில்லியன் ரூபாவைக் கோரியிருந்தது. ஆனால், மத்திய அரசாங்கம், 2,500 மில்லியன் ரூபாவை மாத்திரமே, 2017ஆம் ஆண்டில் வழங்கியிருந்தது. மத்திய அரசாங்கம் நிதியை வழங்கும் போது, எதற்காக  இந்த நிதியைச் செல...

உலக காற்பந்தாட்ட அணிகளுடன் இணைந்த தமிழீழம்!

உலக காற்பந்தாட்ட அணிகளுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பினை தமிழீழ ஈழ அணி ஒன்று பெற்றுள்ளது. ConIFA உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டித்தொடரில் தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி ஒன்று விளையாடி வருகின்றது. இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் எல்லாளன் வன்னின் என்ற தமிழீழ காற்பந்தாட்ட அணி போட்டியிட்டுள்ளது. லண்டனில் உள்ள சோமாலியா புலம்பெயர்ந்தோர் அணியான Barawaவுக்கும், கனடா, லண்டன் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களை கொண்ட தமிழீழ அணியும் போட்டியிட்டுள்ளது. இந்தப்...

சிறீலங்கா அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான ரூபவாகினி’ கனடா வருகைக்கு பலத்த எதிர்ப்பு!

சிறீலங்கா அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான 'ரூபவாகினி' தொலைக்காட்சியினர் கனடாவுக்கு வருவதைத் தமிழ்த்தாய் மன்றம் மற்றும் மூதறிஞர் கந்தமுருகேசனார் பண்பாட்டு அமைப்பு ஆகியன வன்மையாக எதிர்க்கின்றன. இவ்விடையம் குறித்து கடந்த 31.12.2017 அன்று ரொரன்ரோவில் ஊடச் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இவ்வமைப்பின் பிரதிநிதிகள் ஊடகவிலயாளர்களைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அவ்வறிக்கை வருமாறு. பௌத்த சிங்களப்பேரினவாத சிறீலங்கா அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான 'ரூபவாகினி' தொலைக்காட்சியி...