செய்திகள் பிராந்திய செய்திகள்

பிராந்திய செய்திகள்

மலையத்தில் நோர்வூட் பகுதி வீடுகள் தாழிறக்கம் காரணமாக மக்கள் இடப்பெயர்வு

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன் டிலரி தோட்டப் பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டதினால் அந்த பிரதேசத்தில் உள்ள எட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் வசித்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 47 பேர் சென். ஜோன் டிலரி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர்முகாமைத்துவ நிலையத்தினால் கிராம சேவகர்கள் ஊடாக சமைத்த உணவு வழங்குவதற்கும் அடிப்படைகளை வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மலை...

மலையக தோட்ட தொழிலாளர்களும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்

சவால்களை போன்று வடமேல் மாகாணத்திலுள்ள தோட்ட தொழிலாளர்களும் அனுபவித்து வருகின்றனர். வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் வாழும் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட தமக்கு கிடைப்பதில்லையென அம்மக்கள் அங்கலாய்கின்றனர். குருநாகல் மாவட்டத்தில் தோட்ட் தொழிலாளர்கள் இருக்கின்றார்களா என்பது கூட எவருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டு உரிமையோ காணி உரிமையோ தமக்கு வழங்கப்படவில்லையென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ...

த்தில் நீர்தேதொடர் மழை மலையகக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மலையகத்தில் பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கமைய, கெனியன் நீர்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அத்தோடு விமலசுரேந்திர நீர்தேக்கத்திலிருந்து மேலதிக நீர் வெளியாகுவதுடன், மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் பிர...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கும்

நாட்டின் பல பிரதேசங்களில் ஏற்பட்டிருந்த வௌ்ள நீர் தற்போது வடிந்தோடிக் கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. எனினும் 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி கூறினார். தற்போது நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட, அயகம, கிரிஉல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச ...

மாணவர்களே ஆயத்தமா ? பாடசாலைகள் புதன்கிழமை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் புதன்கிழமை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் மதீப்பீட்டு பணிகளுக்காக முழுமையாக பயன்படுத்தப்படும் ஐந்து பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 21 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்படுகளுக்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் செப்டம்பர் 11 திகதி மீண்டும் மூன்றாம் தவணைக்காக தி...

மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேறுமாறும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில்அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்...

32 வருடங்களின் பின்னர் மாட்டு வண்டிச் சவாரி

யாழ். ஊர்காவற்துறை பிரதேசத்தில் “மாட்டு வண்டிச் சவாரி” போட்டி நேற்று நடத்தப்பட்டது. 32 வருடங்களின் பின்னர் அந்தப் பகுதியில் சவாரிப் போட்டி நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டது. ஊர்காவற்துறை – புதுவேலி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 32 மாடுகள் சவாரியில் கலந்து கொண்டன. அவை ஒவ்வொன்றும் சுமார் 10 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பெறுமதியுடையவை என்று கூறப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளில் மாட்டு வண்டிச் சவாரியும் ஒன்று.

தந்தை செல்வா அமைத்த பாதை­யி­லேயே தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் பய­ணம் தொடர்­கி­றது

தந்தை செல்­வா­வால் ஆரம்­பிக்­கப்­பட்டு தள­பதி அமி­ரால் தொட­ரப்­பட்ட பாதை மிகக் கடி­ன­மாக இருந்­தது. தமிழ் மக்­கள் சார்­பில் உறு­தி­யாக செயற்­பட்ட கட்­சி­யாக தமிழ் அர­சுக் கட்சி ஓர் நியா­ய­மான பாதை­யில் பய­ணித்­தது. அது இப்­போ­தும் தொடர்­கின்­றது. இவ்­வாறு தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரும் இலங்­கை­யின் முத­லா­வது தமிழ் எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான அப்­பா­பிள்ளை அமிர்­த­லிங்­கத்...

20வது திருத்தத்திற்கு வட மாகாணசபை எதிர்ப்பு? இறுதி தீர்மானம் வியாழனன்று

20 ஆம் திருத்தச் சட்டத்தின் விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை (07) எடுத்துக்கொள்ளப்படுமென வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். வடமாகாண சபையின் 104 வது விசேட அமர்வு இன்று திங்கட்கிழமை (04.09) ஆரம்பமாகியது. 20 வது திருத்தச் சட்டத்தின் விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மாகாண சபைகளின் காலத்தினை நீடிப்பதற்கும், அந்த காலத்தினை குறைப்பதற்கும் பாராளுமன்றம் எத்தனித்துள்ளதுடன், விசேடமாக வட கிழக்கு மாகாணங்களின் உரித்துக்களை சுவீகரித்துக் கொள்வதற்கு முனைகின்றது. எனவே, 20 வது அர...

சுன்னாகத்தில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலி.

யாழ்ப்பாணம், சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கியதில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தையொட்டி, நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு வீட்டில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே, இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இன்று சனிக்கிழமை (08) காலை, உறவினர்கள் அவ்வீட்டுக்குச் சென்றபோதே சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை, சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்