வவுனியாவில் யானையின் வயிற்றை கிழித்து குட்டியை வெளியே எடுத்த இரயில்
வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதி யானை பலி மடு, பறயனாலங்குளம் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு யானை ஒன்றும் அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்துள்ளது.
இச்சம்பவம் அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற புகையிரதம் பறயனாலங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த புகையிரதப் பாதையில் நின்ற யானையுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து காரணமாக யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், யானையின் வயிற்றுக்குள் இருந்த யானைக் குட்டிய...
மன்னாரின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
முருங்கனிலிருந்து மன்னாருக்கு நீரை எடுத்து வரும் பிரதான நீர்க்குழாயில் உயிர்த்தராசன்குளம் பகுதியில் இன்று 06.03.2017 மாலை ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக மன்னாரின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. வங்காலை, திருக்கேதீஸ்வரம் மற்றும் மன்னார் நகரபகுதி, எருக்கலாம்பிட்டி, தோட்டவெளி, தாழ்வுபாடு உட்பட பல பகுதிகளில் தற்போது நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பை சீர்செய்யும் பணிகளில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் மும்முரமாக ஈடுபட்டு வருவத...
கிளிநொச்சியில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம்!
கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த 5 நாட்களிற்கு முன்னர் 22 வயதுடைய யுவதி ஒருவர் வீட்டில் பிரசவித்த குழந்தையை வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் குழி தோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புபட்ட யுவதி மகப்பேற்றின் பின்னர் ஏற்பட்ட கடும் இரத்த போக்கின் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சம்பவம் தொடர்பில் வைத்தியர்களின் விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது,
பொலிசார...
அகழ்வாராய்ச்சியின் போது வவுனியாவில் 10 அடி உயரமான சிலைகள்!!
வவுனியா – மஹா கச்சக்கொடி பகுதியில் அநுராதபுரம் யுகத்திற்கான ஆறு தூபிகள், 10 அடி உயரமான சிலைகளும் 110 க்கும் அதிகமான கற்குகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போதே குறித்த தாதுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களத்தின் முல்லைத்தீவு பிராந்திய பொறுப்பதிகாரி புலஸ்திகம சிரிரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் சுமார் 50 ஓலைச்சுவடிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இவ்வாறு கண்டு...
புதுக்குடியிருப்பு முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று நிகழ்ந்த அதிசயம்!
புதுக்குடியிருப்பு அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மிக பெரிய நாகம் ஒன்று ஆலயத்தில் காட்சி கொடுத்துள்ளது .
இந்த நிகழ்வை அப்பிரதேசத்தில் வசிக்கும் பல அடியவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதோடு பாம்புக்கு பால் வார்த்து வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
வவுனியா இளைஞர்களின் தீபாவளி சமூகப் பணிகளும், கலாசார நிகழ்வுகளும்.!(படங்கள் இணைப்பும்)
வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் திரு பேரின்பநாதன் அனோஜன் அவர்களின் தலைமையில், தாண்டிக்குளம் கிராம சேவையாளர் திரு வி.யோகநாதன் முன்னிலையில் 29.10.2016 சனிக்கிழமை கழக மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தீபாவளி தினத்தில் சமூக பணிகளையும், கலாசார நிகழ்வுகளையும் அத்துடன் வித்தியாசமான முறையில் துடுப்பாட்ட, கரப்பந்து விளையாட்டுகளினை ஒழுங்கமைத்து இந்த வருட தீபாவளியினை சிறப்பாக சமூகத்துடன் இளைஞர்கள் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.
வவுனிய...
ஓமந்தையில் இளைஞர்களின் உற்சாக வரவேற்புடன் வவுனியா நகர் வரை மகேலவின் நடைபவனி.! (படங்கள்)
தெற்கில் காலி கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி யாழ் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது. இன்று(13.10.2016) காலை 5.30மணியளவில் புளியங்குளம் நகரில் ஆரம்பமாகி காலை 7.30 மணியளவில் ஓமந்தை மத்திய கல்லூரியை வந்தடைந்தது. இளைஞர் சேவைகள் மன்றத்தின் விளம்பர பதாகை நெடுங்கேணி இளைஞர்களிடம் இருந்து தமிழ் தேசிய இளைஞர் கழகம், ஓமந்தை இளைஞர் கழகம் மற்றும் ஐயனார் விளையாட்டுக்கழகத்தினரால் ஓமந்தையில் பெற்றுக்கொள்ளப்பட்ட்து....
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் சிறுவர் தின நிகழ்வுகள்.!(படங்கள் இணைப்பு)
திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் இன்று ( 01.10.2016) காலை 9.30 மணிக்கு சிறுவர்களை மகிழ்வித்து வாழ்த்தும் அவர்களின் உரிமைக்கான சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் முன்பள்ளியின் அதிபர் திருமதி.மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.சுந்தரலிங்கம் காண்டீபன் (திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளரும் வவுனியா மாவட்ட சாரணிய உதவி ஆணையாளர்) கலந்து சிறப்பித்திருந்தார்.
...
வவுனியா ஓமந்தையில் நடைபெற்ற முதியோர் சிறுவர் தின நிகழ்வுகள். (படங்கள் இணைப்பு)
வவுனியா ஓமந்தை கிராம அலுவலர் செல்வி அனுஷியா தலைமையில் இன்று(01/10) காலை 9 மணிக்கு கிராம அலுவலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி கர்ணன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக ஓமத்தை மத்திய கல்லூரி அதிபர் திரு திருஞானசம்மந்தமூர்த்தி , ஓமந்தை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் திரு மதுரகன், , தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் காண்டீபன்,செயலாளர் கேசவன்,உறுப்பினர் கெர்சோன் , அஸ்திரம் நற்பணி மன்றத்தின் தலைவர் திரு சுதர்சன் மற்றும் ...
உதைபந்தாட்டத்தை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒத்திவைப்பு
மன்னார் மாவட்டத்தில் உதைபந்தாட்டம் சம்மந்தமாக அண்மையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராயுமுகமாகவும், அவற்றினை நிவர்த்திசெய்யும் நோக்கோடும், அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் 02.10.2016 அன்று மதியம் 12.00 மணியளவில் கச்சேரி ஜெயக்கா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலானது, அன்றைய தினம் தேசியமட்ட போட்டி ஒன்று நடைபெறவிருப்பதனாலும், அதில் அனைத்து விளையாட்டு உத்தியோகத்தர்களும் கலந்துகொள்ள வேண்டியிருப்பதனாலும், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வேறு திகதிக்கு ஒத்திவைக்கப்படுகின்...