பிராந்திய செய்திகள் மட்டு அம்பாறை

மட்டு அம்பாறை

மட்டக்களப்பில் கணவன் இறந்த பின் குழந்தை பெற்ற பெண்!! கிணற்றுக்குள் குழந்தை சடலம்

மட்டக்களப்பு மேல்மாடித் தெருவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பிறந்த குழந்தையின் சடலம் மீட்டப்பட்டுள்ளது. மேல்மாடித்தெருவில் கணவனும் மனைவியுமான வைத்தியர்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் பணிபுரிந்த பெண்ணொருவருக்கு பிறந்த குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்;துறையினர் தெரிவித்தனர். கடந்த மாதம் 27ஆம் திகதி பிறந்த குழந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குழந்தையின் தாய் தப்பியோடிள்ள நிலையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர். குறித்த பணி...

களுத்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழ் சிறைச்சாலை அதிகாரியின் உடல் நல்லடக்கம்

களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மட்டக்களப்பு, காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் தர்மீகன் சிவானந்தத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரின் பூதவுடல்  காரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரின் இழப்பால் காரைதீவு பிரதேசம் முழுவதும் சோகமயமாக காட்சியளித்தது. 24 வயதாகும் தர்மீகன் சிவானந்தம் அடுத்த மாதம் நியுஸிலாந்து செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது. கள...

கொக்கட்டிச் சோலை படுகொலை சம்பவத்தின் 30-ஆவது ஆண்டு நினைவு

இலங்கையின் கிழக்கே 1987ல் இடம் பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் 30வது ஆண்டு நினைவேந்தல் இன்று சனிக்கிழமை உள்ளுர் மக்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1987ம் ஆண்டு ஜனவரி 27, 28 ஆம் தேதிகளில் அந்த பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது இறால் பண்ணையொன்றில் பணியாற்றிய உள்ளுர் பணியாளர்கள் உட்பட 87 பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டிருந்தனர். இக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் உட்பட தமிழ் போராட்ட அமைப்புகள் அந...

லண்டன் வெள்ளைக்காரப் பொம்பிளையை மட்டகளப்பில் கரம் பிடித்தார் மட்டக்களப்பு மாப்பிளை

இந்து சமயத்தின் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதில் யாருமே தவறியதில்லை, இருந்தாலும் சில சில இடங்களில் இந்து சமய மரபினை பின்பற்றாத சைவ சமயத்தவரும் உள்ள இந்த காலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த யுவதி ஒருவர் சைவ சமய மாரபின் படி திருமணம் செய்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருக்கும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யுவதிக்கும் இந்து சமய முறைப்படியான திருமண நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. அண்மைக்காலங்களில் அதிகமாக வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வந்து திருமண பந்தத்தில் இணை...

யாசகர்களுக்கிடையில் கத்திக்குத்து: ஒருவர் வைத்தியசாலையில்

“புத்தளம் மீன் சந்தைக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இரண்டு யாசகர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், கத்திக்குத்துக்கு இலக்காகி அதிலொருவர் படுகாயமடைந்துள்ளார்” என புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன, தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இரண்டு யாசகர்களும் ஒரே இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பாக மாறியதுடன், அதில் ஒரு யாசகர், மற்றைய யாசகரின் கழுத்து மற்றும் வயிற்றுப...

இலங்கையின் முதலாவது கிராம சவைத் தலைவி திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்த நிதி திட்ட ...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தரமான சுய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கோடு நெடுந்தீவைச் சேர்ந்த இலங்கையின் முதலாவது கிராம சேவைத் தலைவி திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக ‘தகர் வளர் துயர் தகர்’ எனும் பொருள் பதித்து வட மாகாண சபையூடாக நல்லின ஆடுகள் வழங்கப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக தேவையறிந்து மட்டக்களப்பில் 08 குடும்பங்களுக்கு நிரந்தர பொருளீட்டலுக்கான முயற்சிக்காக செயல் திட்டமொன்று  மனித நேயக்கரங்கள் நிறுவனத்தின் ஊடாக அறிமுகம்  செய்யப்ப...

மட்டக்களப்பில் ஏற்பட்ட அறிகுறி!! சுனாமி அனர்த்தம் ஏற்படுமா?

மட்டக்களப்பு வாவிகளில் வழமைக்கு மாறாக பாம்புகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதாக தெரிய வருகிறது. மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில் பாம்புகள் கரையொதுங்குவதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிய வருகிறது. முக்குலியான் எனப்படும் ஒருவகை பாம்புகள் கரையொதுங்குவதால் மீனவர்களின் அன்றாட செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்புக்கள் ஒரு அடியிலிருந்து இரண்டரை அடி நீளமானதாக காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கால நிலை மாற்றத்தினால் இந்த பாம்புகள் கரையொதுங்கி இருப்பதாக மீன்பிட...

மட்டக்களப்பில் பாம்புகளோடு சேர்ந்து வாழும் குடும்பம்! இப்படியொரு வாழ்வா?

பாம்பு புற்று மற்றும் பாம்புகளுக்கு மத்தியிலும் தமது அன்றாடா வாழ்க்கையை மட்டக்களப்பு பதுளை வீதியில் உள்ள சர்வோதய நகர் கிராமத்தில் 4 பிள்ளைகளை கொண்ட குடும்பம் வாழ்ந்து வருகின்ற அவலம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குடும்பத்தில் வறுமை தலைவிரித்தாடிக் கொண்டிருந்தாலும், இந்த உலகத்தில் எப்படியும் வாழ்ந்து காட்டலாம் என்ற தன் நம்பிக்கையுடன் கைக்குழந்தையும் வைத்து கொண்டு, பாம்புகளுக்கு மத்தியில் வாழ்வது என்பது ஒரு பாரிய சவாலாக இருந்தும் அதற்கு எதிர் நீச்சல் போடுகின்றாள் அக்குழந்தையின் தாய். உண்மையில...

மட்டக்களப்பில் 12 வயதான கஜேந்திரனின் உயிரைப் பறித்தது புறா!!

மட்டக்களப்பு தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட பிரதேசத்தில் வசிக்கும் 12வயதுடைய குருகுலசிங்கம் கஜேந்திரன் என்பவர் மட்டக்களப்பு தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட பிரதேசத்தில் வசிக்கும் 12வயதுடைய குருகுலசிங்கம் கஜேந்திரன் என்பவர் பரிதாபகரமாக இன்று காலை உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இன்று (01.11.2016) காலை 7.00 மணியளவில் இச் சிறுவன் தன் வீட்டின் மலசல கூடத்திற்கு மேல் பகுதியில் தான் வளர்ந்து வந்த ஒரு சோடி புறா கூட்டினுள் புறாவிற்கு உணவு வைப்பதற்காக ஏறமுயன்ற வேளை...

இலங்கையில் வேலையற்ற பட்டதாரிகள் அரசு வேலை கேட்டு போராட்டம்

இலங்கையின் கிழக்கே வேலையற்ற பட்டதாரிகள், தங்களுக்கு அரச துறைகளில் வேலை வாய்ப்பு கோரி புதன்கிழமை மட்டக்களப்பு நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண சபையில் 5000ற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக மாகாண முதலமைச்சரே ஓப்புக் கொண்டுள்ளார். இந்த வெற்றிடங்களில் தங்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியும் என ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரிகளில் ...