மன்னாரில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 திகதி முதல் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) வயது-71 என்பவர் நேற்று புதன் கிழமை(18) மாலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய், உவரி காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மன்னார் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலினையடுத்து மன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு விச...

உலகிலுள்ள அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பிய- முத்தையா முரளிதரன்

ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படும் இந்த உலகில் தமிழர்கள் படைக்கும் சாதனைகள் எண்ணற்றவை. எல்லா துறைகளிலும் தமது காலடிகளை பதித்து வருகின்றார்கள் தமிழர்கள். அந்த வகையில் கிரிக்கெட் உலகின் நாயகனாக கொண்டாடப்படுபவர் தமிழரான முத்தையா முரளிதரன். உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை கொண்ட முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் வலதுகை சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். 1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பிறந்த முரளிதரன் நேற்றைய தினம் 46ஆவது பிறந்தநாளை கொண்...

கனடாவில் காணாமல் போன மகன்-வெளியே கூற முடியாமல் இருந்த தாய்!-படுகொலைகள் குறித்து வெளிவரும் தகவல்கள்

கனடாவில் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தரினால், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமது பிள்ளை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை காலமும் தகவல்களை வெளியிடாமல் இருந்தமைக்கான காரணத்தை யாழ்ப்பாணத்திலுள்ள உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். சன்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்ற 37 வயதான கிருஷ்ணகுமார் கனகரட்ணம் கொலை செய்யப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அவர் கடந்த சில வருடங்களாக காணாமல் போயிருந்தார். எனினும் அதுகு...

வடக்கு மாகாண விக்னேஸ்வரனுடன் இணையத் தயார்!-சுரேஸ் பிரேமச்சந்திரன்

மக்களது ஆணையை முன்னெடுத்து வெற்றி பெறச் செய்வதற்கும் சரியான கொள்கைகளை முதலமைச்சர் வகுக்கக் கூடிய சூழ்நிலை வருமாக இருந்தால் நிச்சயமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இந்தியாவிற்கு புறப்பட முன்தாக தனது கேள்வி பதிலில் தமிழ் மக்கள் விரும்பும் பட்சத்தில் தான் மீண்டும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கூறியிருக்கின்றார். அதுவொரு கட்சியினூடாக வ...

சிறிலங்கா கடற்படைக்கு இரு புதிய பீரங்கிப் ரோந்துக் கப்பல்

சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தில் அதிகாரபூர்வமாக கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது. பி-624 தொடர் இலக்கம் இடப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பலுக்கு எஸ்எல்என்எஸ் சிந்துரால என்று பெயரிடப்பட்டுள்ளது. கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல் அண்மையில் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்பட்டு, கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இன்று இந்தப் போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையில் அதிகாரபூர்வமான இணை...

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை விடுவிக்கக் கோரி 3 இலட்சம் கையெழுத்துக்கள்!

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யக் கோரி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மேற்கொண்டு வந்த கையெழுத்துப் போராட்டத்தில் பெறப்பட்ட 3 இலட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய பிரதிகள் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும், கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரனிடம் இன்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.

கூட்டு எதிரணியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் – சம்பந்தன் சவால்

தமக்கு எதிராக கூட்டு எதிரணியினர் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தால் அதனை எதிர்கொள்வதற்குத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர, கூட்டு எதிரணியினர் முடிவு செய்திருப்பதாக வெளியான செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். “எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரும் நெறிமுறை அல்...

வடமராட்சி மீனவரின் வலையில் சிக்கிய ஒன்றரைக் கோடி ரூபா மதிப்புள்ள பாரை மீன்கள்!

வடமராட்சி கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் கரைவலையில், நேற்று 20 ஆயிரம் கிலோ பாரை மீன்கள் அகப்பட்டுள்ளன. ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது. இந்த மீன்களின் மதிப்பு சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம், குறித்த மீனவரிடம் இருந்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டு விட்டன.

உடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது

வவுனியா உள்ளூராட்சி சபைகளில், ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன முன்னணி போன்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடனும், ஈபிடிபியுடனும் இணைந்து ஈபிஆர்எல்எவ் ஆட்சியமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியில் இருந்து ஜனநாயக தமிழ் அரசுக் கட்சி வெளியேறியுள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக தமிழ் அரசுக் கட்சி புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து- தமிழ்த் தேசிய விடுதலைக் கூட...

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபை சுதந்திரக் கட்சி வசமானது!-தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று மோதியதால் வ...

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையை சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியுள்ளது. வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையின் தவிசாளர் உப தவிசாளர் தெரிவு இன்று வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, சுதந்திர கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் அந்தோணி, தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சு.ஜெகதீஸ்வரன், தமிழர் விடுதலை கூட்டணியின் யேசுதாஸ் டெல்சன் ஆகியோரின் பெயர்கள் தவிசாளர் பதவிக்காக, முன்வைக்கப்பட்டன. முதல் சுற்றில் தமிழர் விடுதலைக் கூட்டணி தோல்வியடைந்தது. இதையடுத்து ...