சினிமா சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகி சென்னையில் கைது

சென்னையில் திரைப்பட சங்க நிர்வாகிகள் அளித்த தகவலின் பேரில் பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகியை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். சில இணையதளங்களில் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக திரைப்பட சங்க நிர்வாகிகள் போலீசாரிடம் புகார்கள் அளித்து வருகின...

சென்னை சில்க்ஸ் விளம்பரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய செய்தி என்னவென்றால் சென்னையில் பல மாடிகளைக் கொண்ட பிரபலமான கடையான சென்னை சில்க்ஸ் தீ விபத்தே... இதற்கு நெட்டிசன்கள் பலவிதமான மீம்ஸ்களைப் போட்டு கேலி, கிண்டல்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இக்கடையின் விளம்பரத்தில் நடித்த நடிகையையும் வைத்து கிண்டல் செய்துள்ளனர். சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடிப்பதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் 25 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்: கமல் திடீர் அறிவிப்பு

சினிமா டிக்கெட்டுகள் மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவதாக நடிகர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது. இதனால், சினிமா உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று சென்னையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:- மத்...

மனைவிக்கு தெரியாமல் வீட்டில் திருடும் விவேக் ஓப்ராய்

இந்தி நடிகர் விவேக் ஓப்ராயிடம் ‘சிறு குழந்தையாக இருந்த போது நீங்கள் வீட்டில் எதையாவது திருடி இருக்கிறீர்களா?’ என்று கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்......... அஜீத்தின் ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடிப்பவர் இந்தி நடிகர் விவேக் ஓப்ராய். இவர் ‘பேங்க்சோர்’ என்ற இந்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். இது வங்கி திருட்டு தொடர்பான கதை. இந்த படம் வருகிற 16-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ‘சிறு குழந்தையாக இருந்த போது நீங்கள் வீட்டில் எதையாவது திர...

சீரியல் நடிகர் என்பதை விட விஜய்யின் நண்பன்னு சொல்றது தான் பெருமை.. நெகிழ்ச்சியில் சஞ்சீவ்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான திருமதி செல்வம் என்ற சீரியல் மூலம் மக்கள் மனதில் பதிந்தவர் சஞ்சீவ். இதற்கு முன்பு பல படங்கள் நடித்திருந்தாலும் இந்த சீரியல் மூலமாக தான் இவர் புகழ் பெற்றார். அதன் பின்னர் "மானாட மயிலாட" என்கிற நடன நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளாராக மாறி அனைவரையும் வியக்க வைத்தார். இப்போது நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு மெகா தொடர் நடித்து வருகிறார். இதை பற்றி அவர் கூறுகையில், திருமதி செல்வத்திற்கு பிறகு எனக்கு ஒரு இடைவெளி தேவைப்பட்டது. அதனால் தான் வேறு எதிலு...

“தனுஷ் தங்கச்சி நான்!” – ‘ராஜா ராணி’ ஸ்ரீதேவி

சின்னத்திரையில் கண்களை உருட்டி, மிரட்டிக் கோப முகம் காட்டும் ஸ்ரீதேவியின் சமூக வலைதளப் பக்கங்கள் முழுவதும் நாய்க்குட்டிகளின் புகைப்படங்களால் நிறைந்திருக்கின்றன. அந்த அளவுக்கு பப்பி லவ்வராம் இந்த அழகுப்பொண்ணு. சின்னத்திரையின் தற்போதைய ‘ஸ்ரீதேவி’ இவர்தான். விஜய் டிவி-யின் புதிய சீரியலான ‘ராஜா ராணி’ தொடரில் வில்லியாக வேடம் கட்டியிருக்கும் ஸ்ரீதேவி, நிஜத்தில் அப்படியே எதிர்மாறாக இருக்கிறார். அவ்வளவு ஜோவியல், ஜாலி டைப். “சின்ன வயசுலேயே மீடியாவில் நீண்ட பயணம் உங்களோடது. மீடியாவுக்கு முன்னாடி..?” ...

ஆவணம் இல்லாமல் பொலிசிடம் சிக்கிய பாகுபலி நாயகி

பாகுபலி படத்தை தொடர்ந்து அனுஷ்கா தெலுங்கில் புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பொள்ளாச்சியில் நடைபெற்றிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவனை போலீசார் சோதனை செய்தபோது, முறையான ஆவணங்கள் அந்த கேரவனுக்கு இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அனுஷ்கா பயன்படுத்திய கேரவனை போலீசார் பறிமுதல் செய்தனர். பாக்மதி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஜி.அசோக் இயக்க, எஸ். தமன் இசையமைத்து வருகிறார். படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரு...

பிரதமர் மோடி முன்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட பிரியங்கா சோப்ரா

பிரதமர் மோடியை சந்தித்தபோது கால்மேல் கால் போட்டு அமர்ந்து பேசியதால் பிரியங்கா சோப்ராவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. அரசு முறை பயணமாக 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி சென்றபோது நடிகை பிரியங்கா சோப்ரா அவரை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் முன்பு அவர் குட்டைப் பாவடை அணிந்து கால் மேல் கால் போட்டு  தெரியும்படியாக அமர்ந்திருப்பது போன்று எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் பிரியங்கா சோப்ரா. இந்த பதிவை பார்த்த ...

சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை: சுருதிஹாசன்

சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். “சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். எனது தந்தை உனக்கு எது பிடிக்கிறதோ அதை சுதந்திரமாக செய் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதுபோல் சுதந்திரமாக இருக்கிறேன். அதற்காக கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவது இல்லை. சுதந்திரத்தை நல்லபடியாகவே பயன்படுத்துகிறேன். இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதும் நான் எடுத்த முடிவுதான். தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்க...

நடுவானில் விமானம் நொறுங்கியதால்ஷாரூக்கான் உட்பட பலர் பலியான தாக வந்த வதந்தி ஐரோப்பிய நாடுகளில் பரபரப...

ஐரோப்பிய செய்தி சேனல் ஒன்று, பிரேக்கிங் நியூஸ் என்று நேற்று ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், தனி விமானம் ஒன்றில் பாரிஸ் நகருக்கு வந்துகொண்டிருந்தார். அவருடன் அவர் உதவியாளர் உட்பட 7 பேர் இருந்தனர். மோசமான வானிலை காரணமாக விமானம் நடுவானில் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் ஷாரூக் உட்பட 7 பேரும் பலியாகிவிட்டனர்’ என்று செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தி காட்டுத் தீ போல பரவியது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்தியாவுக்கு போன் செய்து இதுபற்றி விசாரித்த வண்ணம் ...