ஆளுநர் விளக்கம்எப்படி ஏற்றுக் கொள்வது?

பெரும் கனவுகளோடும் ஆசைகளோடும் பெண் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பும் அத்தனை தமிழக பெற்றோர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ. பல்கலைக்கழகங்களின் உயரதிகாரிகளின் பாலியல் இச்சைகளுக்கு மாணவிகளை இரையாக்கும் பச்சையான புரோக்கர் வேலையை பார்த்திருக்கும் பேராசிரியை நிர்மலா தேவி தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பெயரையும் அவ்வுரையாடலின் இடையே சொன்னதால். ஆளுநருக்காகத்தான் நிர்மலா தேவி மாணவிகளை ஏற்பாடு செய்தாரா? என்ற கேள்வி பெற்றோர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகா...

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு

‘‘மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாலும் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்’’ என்று அனைத்துத் துறைகளுக்கும் பணியாளர் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை ஒருவர், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்குத் தாயானார். அவர் பேறுகால விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு விடுப்பு வழங்க முடியாது என்று நிராகரித்துள்ளனர். வாடகை தாய் மூலம் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அவற்றுக்கு உண்மையான தாயாகி விட முடியாது என்ப...

தாஜ்மகாலைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை

‘‘தாஜ்மகாலைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னமாக விளங்கும் தாஜ்மகாலைப் பாதுகாக்கக் கோரி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் எம்.சி.மேத்தா உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும்...

கோடீஸ்வர கிராமமாக மாறிய அருணாச்சலப் பிரதேசத்தின் போம்ஜா!

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள போம்ஜா கிராமம் ஆசியாவின் பணக்கார கிராமங்களில் ஒன்றாக தற்போது மாறியுள்ளது. ராணுவப் பயன்களுக்காக இந்தக் கிராமவாசிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. புதனன்று இந்த கிராமத்துக்கு வந்த முதல்வர் பீமா காண்டு மொத்தம் ரூ.40.8 கோடிக்கான காசோலையை நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக அளித்தார். போம்ஜா கிராமத்தில் மொத்தம் 31 குடும்பங்கள் உள்ளன. இந்த நிலம் கையக இழப்பீட்டுத் தொகையினால் கிராமத்தின் இந்தக் குடும்பங்கள் ஒரே நாளில் கோட...

‘ஐ போனுக்கு பதிலாக சலவை சோப்’: பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மீது புகார்

மும்பையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ஆர்டர் செய்த ஐ -போன் 8-க்கு பதிலாக சலவை சோப்புக் கட்டியை பெற்ற சம்பவம் நடந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த 26 வயதான, தாப்ரெஜ் மெகபூப் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திடம் 15-20% தள்ளுபடியில் 55,000 ரூபாய்க்கு ஒரே தொகையில் ஐபோன் 8-ஐ புக் செய்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 22-ம் தேதி அவர் ஆர்டர் செய்த ஐபோன் 8 தனியார் ஆன்லைன் நிறுவனத்திடமிருந்து டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதனை உற்சாகத்துடன் பிரித்த தாப...

டெல்லி பள்ளி ஒன்றில் கழிப்பறையில் மாணவன் சடலமாக கண்டெடுப்பு

டெல்லியிலுள்ள பள்ளி ஒன்றில் 9-வது வகுப்பு மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். . டெல்லியைச் சேர்ந்த 16 வயது மாணவர் துஷார் குமார். இவர் டெல்லியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (வியாழன்) காலை வழக்கம் போல துஷார் குமார் பள்ளிக்குச் சென்றார். பள்ளிக்குச் சென்ற சிறிது நேரத்தில் பள்ளி நிர்வாகத்திடமிருந்து துஷார் குமாரின் பெற்றோருக்கு துஷார் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “த...

பெங்களூர் பெல்லந்தூர் ஏரியில் மீண்டும் தீ

பெங்களுரில் அமைந்துள்ள பெல்லந்தூர் ஏரியில் அதிக அளவில் ரசாயனக் கழிவுகள் கலப்பதன் காரணமாக அங்குள்ள நீர்ப்பகுதியில் நேற்று மீண்டும் தீப்பிடித்ததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். பெங்களூரின் தென்கிழக்கு பகுதியான பெல்லந்தூரில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் பெங்களூரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவிலான ரசாயனக் கழிவுகள் கலப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு ரசாயனக் கழிவுகள் கலப்பதால், அந்த ஏரியில் கடந்த ஆண்டு தீப்பிடித்தது. கர்நாடகாவில் பெ...

மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் தலைமையாசிரியர் உயிரிழப்பு

ஹரியாணாவில் 12-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் பள்ளித் தலைமையாசிரியர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் தரப்பில், "ஹரியாணாவின்  யமுனா நகரிலுள்ள பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார் ரித்து. இவர் இன்று (சனிக்கிழமை) காலை 11.30 மணியளவில் தனது அலுவலகத்தில் அமர்திருக்கும்போது அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவரை நான்கு முறை துப்பாக்கியால்  சுட்டுள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்'' என்று தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில்...

உலக அளவில் அதிக அறிவியல், பொறியியல் பட்டதாரிகள் இந்தியாவில்

உலக அளவில் 2014-ம் ஆண்டு அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளை அதிக அளவில் உருவாக்கி இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் அறிவியல் அறக்கட்டளை உலக அளவில் அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் குறித்த ஆய்வு நடத்தியுள்ளது. இதில், உலக அளவில் 2014-ம் ஆண்டு மொத்தம் 75 லட்சம் பேருக்கு அறிவியல் மற்றும் பொறியில் துறையில் இளநிலை பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் நான்கில் ஒரு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்களாவர். இந்தப் பட்டியலில் 25 சதவீதம் பேருடன் இந்தியா முதலிடத்திலும், ...

29 வயது இன்ஜினீயரை கடத்திச்சென்று கல்யாணம்: காணொலி இணைப்பு!

பீகாரில் 29 வயது இளைஞரை கடத்தி வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பொகாரோ ஸ்டீல் பிளான்ட்டில், ஜூனியர் மேலாளராக பணிபுரியும் பொறியியல் பட்டதாரி வினோத் குமார். கடந்த டிசம்பர் 3-ம் தேதி பாட்னாவின் பாண்டராக் பகுதிக்கு வினோத் கடத்திச் செல்லப்பட்டார். அங்கிருந்து மொக்காம என்னும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட வினோத்துக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. வினோத்தை சுற்றிவளைத்த பெண்கள் அவரைக் கட்டாயப்படுத்தி திருமணத்துக்கான பூஜை சடங்குகள் ச...