மன்னாரில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 திகதி முதல் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) வயது-71 என்பவர் நேற்று புதன் கிழமை(18) மாலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய், உவரி காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மன்னார் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலினையடுத்து மன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு விச...

சிரியா மீதான கூட்டுப்படை தாக்குதலில் ஜேர்மனி இணையாததன் காரணம் இதுதான்!!

சிரியாவுக்கு எதிரான கூட்டுப்படை தாக்குதலில் ஜேர்மனி கலந்து கொள்ளாதது அபாயகரமான தவறு என சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஜேர்மனி தனித்து முடிவெடுத்ததன் காரணம் ரஷ்ய ஜனாதிபதி புடினாக இருக்கலாம் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆசாத் அரசின் நச்சு வாயு தாக்குதலில் 70 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நாடுகள் ஒன்றிணைந்து கடந்த வார இறுதியில் சிரியா மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது. குறித்த தாக்குதலை மேற்கத்திய ...

உலகிலுள்ள அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பிய- முத்தையா முரளிதரன்

ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படும் இந்த உலகில் தமிழர்கள் படைக்கும் சாதனைகள் எண்ணற்றவை. எல்லா துறைகளிலும் தமது காலடிகளை பதித்து வருகின்றார்கள் தமிழர்கள். அந்த வகையில் கிரிக்கெட் உலகின் நாயகனாக கொண்டாடப்படுபவர் தமிழரான முத்தையா முரளிதரன். உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை கொண்ட முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் வலதுகை சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். 1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பிறந்த முரளிதரன் நேற்றைய தினம் 46ஆவது பிறந்தநாளை கொண்...

வடக்கு மாகாண விக்னேஸ்வரனுடன் இணையத் தயார்!-சுரேஸ் பிரேமச்சந்திரன்

மக்களது ஆணையை முன்னெடுத்து வெற்றி பெறச் செய்வதற்கும் சரியான கொள்கைகளை முதலமைச்சர் வகுக்கக் கூடிய சூழ்நிலை வருமாக இருந்தால் நிச்சயமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இந்தியாவிற்கு புறப்பட முன்தாக தனது கேள்வி பதிலில் தமிழ் மக்கள் விரும்பும் பட்சத்தில் தான் மீண்டும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கூறியிருக்கின்றார். அதுவொரு கட்சியினூடாக வ...

முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தை ஒற்றுமையாக நினைவு கூரவேண்டும் யாழ். பல்கலைக்கழக ஒன்றியம்

முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தை தாயகம் எங்கும் ஒற்றுமையாக நினைவு கூரவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மானுடத்தின் மதிப்பினைப் பேணிக்காப்பதில் அக்கறை கொண்டவர்களாக நாகரீமாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் உலக சமூகங்களின் மனச்சாட்சிக் கதவுகளை இறுக்கி மூடி வைத்தபடி, அவசர அவசரமாக இருபத்தோராம் நூற்றாண்டில் எல்லோர் முன்னிலையிலும் நடந்தேறிய, மறைக்கவும், மறக்கவும் முடியாத, மிகவும் கோரமாக நடத்...

சிறிலங்கா கடற்படைக்கு இரு புதிய பீரங்கிப் ரோந்துக் கப்பல்

சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தில் அதிகாரபூர்வமாக கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது. பி-624 தொடர் இலக்கம் இடப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பலுக்கு எஸ்எல்என்எஸ் சிந்துரால என்று பெயரிடப்பட்டுள்ளது. கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல் அண்மையில் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்பட்டு, கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இன்று இந்தப் போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையில் அதிகாரபூர்வமான இணை...

காணாமல் போனோர் பணியக உறுப்பினர்கள் மே மாதம் வட-கிழக்கிற்கு வருவர்

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் மே மாத நடுப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். காணாமல் போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும், பிராந்திய அலுவலகங்களை அமைப்பது சம்பந்தமாக ஆராய்வதற்காகவுமே இவ்விஜயம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பயண நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரமளவில் அறிவிக்கப்படும் என்று பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் பணியகம் நிறுவப்பட்டுள்ளபோதிலும் அதன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இன்னும் ...

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை விடுவிக்கக் கோரி 3 இலட்சம் கையெழுத்துக்கள்!

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யக் கோரி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மேற்கொண்டு வந்த கையெழுத்துப் போராட்டத்தில் பெறப்பட்ட 3 இலட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய பிரதிகள் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும், கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரனிடம் இன்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.

வடமராட்சி மீனவரின் வலையில் சிக்கிய ஒன்றரைக் கோடி ரூபா மதிப்புள்ள பாரை மீன்கள்!

வடமராட்சி கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் கரைவலையில், நேற்று 20 ஆயிரம் கிலோ பாரை மீன்கள் அகப்பட்டுள்ளன. ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது. இந்த மீன்களின் மதிப்பு சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம், குறித்த மீனவரிடம் இருந்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டு விட்டன.

உடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது

வவுனியா உள்ளூராட்சி சபைகளில், ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன முன்னணி போன்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடனும், ஈபிடிபியுடனும் இணைந்து ஈபிஆர்எல்எவ் ஆட்சியமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியில் இருந்து ஜனநாயக தமிழ் அரசுக் கட்சி வெளியேறியுள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக தமிழ் அரசுக் கட்சி புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து- தமிழ்த் தேசிய விடுதலைக் கூட...