யாழில் நடைபெறும் 9ஆவது தேசிய சாரணர் ஜம்பொறி நிகழ்வில் ஜனாதிபதியும் இலங்கை சாரண சங்கத்தின் பிரதம சாரணருமான மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு ஜம்பொறி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை சாரண வரலாற்றில் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தேசிய சாரணர் ஜம்பொறியில் பங்கேற்ற ஜனாதிபதி, தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது, சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட கலந்து கொண்டவர்கள் தங்களது தாய்மொழியில் தேசிய கீதத்தினை இசைத்தனர்.
இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் உட்பட சிரேஷ்ட சாரணத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
9ஆவது தேசிய ஜம்பொறியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைத்தீவு, நேபாளம், மொங்கோலியா, மலேசியா, ட்ரினிடாட் அன்ட் டுபாகோ, ஜப்பான் உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த சாரண அமைப்புகளின் ஆணையாளர்களும் பிரதிநதிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1471902_1052395198115613_456993805798264340_n 1510476_1052395261448940_6832278247803641880_n 12715607_1052394904782309_1207832585504812074_n 12715662_1052394958115637_3614241899994355532_n 12717667_1052395084782291_8930805146489283341_n