வவுனியா ஓமந்தை கிராம அலுவலர் செல்வி அனுஷியா தலைமையில் இன்று(01/10) காலை 9 மணிக்கு கிராம அலுவலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி கர்ணன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக ஓமத்தை மத்திய கல்லூரி அதிபர் திரு திருஞானசம்மந்தமூர்த்தி , ஓமந்தை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் திரு மதுரகன், , தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் காண்டீபன்,செயலாளர் கேசவன்,உறுப்பினர் கெர்சோன் , அஸ்திரம் நற்பணி மன்றத்தின் தலைவர் திரு சுதர்சன் மற்றும் உறுப்பினர்களான கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதரன், தமிழ் விருட்ஷம் அமைப்பின் தலைவர் திரு சந்திரகுமார் கண்ணன், கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவர் சிந்துஜன், சமூகமைப்புகளின் பிரதிநிதிகள் பெரியோர்கள் சிறுவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வுகளுக்கான அனுசரணையினை பாக்கியம் அறக்கட்டளையினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாக்கியம் அறக்கட்டளையின் சார்பில் முதியவர்களுக்கான உடுபுடவைகள் சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பனவும் அன்பளிப்பாக வழங்கப்படடமை குறிப்பிடத்தக்கது.

தாய் செய்திகளுக்காக பி.கரிஸ்.

fb_img_1475307901402 fb_img_1475307921248 20161001_094113 20161001_094239 20161001_094333 20161001_094149 fb_img_1475307852560 20161001_105357-1 20161001_103940 fb_img_1475307868363 20161001_095835 fb_img_1475307931338