தனது மகள் ஆராத்யாவால் படப்பிடிப்பு நின்று போனதாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா ஓரளவுக்கு வளரும் வரை படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு நடிக்க வந்தாலும் மகளையும் படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் ஆராத்யா பற்றி ஐஸ்வர்யா கூறுகையில்,

அழுகை ஒரு நாள் படப்பிடிப்பில் நான் அழுவது போன்ற காட்சியை படமாக்கினார்கள். நான் படத்திற்காக அழுது நடித்ததை பார்த்த ஆராத்யா உண்மை என நினைத்து அய்யோ, அம்மா அழுகிறார்களே என அழத் துவங்கிவிட்டாள்

ஆராத்யா ஆராத்யா அழுததை பார்த்த நான் ஓடிச் சென்று அம்மா சும்மா படத்திற்காக அழுதேன், நிஜத்தில் அல்ல என்பதை சொல்லி புரிய வைத்தேன். அவளுக்கு புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதனால் அன்றைய படப்பிடிப்பை நிறுத்த வேண்டியதாகிவிட்டது.

வேண்டாம் ஆராத்யா படத்திற்கும், நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அழுததை பார்த்த பிறகே அவளை இனி படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வரக் கூடாது என முடிவு செய்தேன்.

அந்த அழுகைக்கு பிறகு ஆராத்யாவை என்னுடன் ஷூட்டிங்கிற்கு அழைத்து வந்து எனது சொகுசு கேரவனில் விட்டுவிட்டு செல்வேன். அவ்வப்போது வந்து அவளை பார்த்து செல்வேன்.