யார் இந்த அகோரிகள் ! காசியில் என்ன செய்கின்றனர் ! விந்தை தகவல்கள் !

யார் இந்த அகோரிகள் ! காசியில் என்ன செய்கின்றனர் ! விந்தை தகவல்கள் !

காசியில் கால பைரவர் ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், அன்னபூரணி ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம் என பல சிறப்புமிக்க ஆலயங்கள் உள்ளது.

கிறித்துவர்களுக்கு ‘ஜெருசலேம்’ யாத்திரை, இஸ்லாமியர்களுக்கு ‘மெக்கா’ யாத்திரை போன்று இந்துக்களுக்கு மிக முக்கியமான யாத்திரையாகக் கருதப்படுவது ‘காசி புனித யாத்திரை’.

‘காசியில் உயிரை விட்டு கங்கைக் கரையில் உடல் எரிக்கப்பட்டால் சொர்க்கத்திற்கு நேராக போய் விடலாம்’ என கருதப்படும் புண்ணிய பூமியில் பல சுவாரசிய உண்மைகளும் புதைந்துள்ளது. இதைப்பற்றி காண்போம்…

கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய ஆன்மீகவாதிகள் ‘அகோரா சாதுகள்’ ஆவார். திரைப்படங்களில் காணும் இந்த அகோரிகள் காசி நகரத்தில் அதிகம் காணப்படுகின்றனர்.

இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் முற்றிலும் மாறுபட்டவை. இவர்கள் மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகின்றனர். சமய சாதுக்கள் என அழைக்கப்படும் இவர்கள் மனித கபால ஓட்டில் உணவு உண்பதையும், குடிப்பதையும் பழக்கமாக வைத்துள்ளனர்.

அகோரிகளின் ஆடை அணியும் பழக்கங்களும் முற்றிலும் மாறுபடுகிறது. உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளமாக உள்ளது. மனித நீர்மம் மற்றும் அழுகும் நிலையில் உள்ள மனித சவம் ஆகியவைகளையும் கூட அவர்கள் உண்ணுவார்கள் என கூறப்படுகிறது.

அகோரிகள் போதைப் பொருள்களை பயன்படுத்துகிறார்கள். எரிக்கப்பட்ட பிணங்களின் தொடை எலும்பை நடை குச்சியாக பயன்படுத்துக்கிறார்கள் சில அகோரிகள்.

இதுவே அகோரியின் சின்னமாக உள்ளது. தலை முடியை வெட்டாது குளிக்காமல் கூட திரிவார்கள். இவர்கள் இறந்த மனித உடலின் சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொண்டு தியானம் செய்வார்கள் என கூறப்படுகிறது

Print Friendly

NO COMMENTS

Leave a Reply