கோபமும் அழகு தான்
நீ
என்மீது கோபப்படும் பொழுது,
என்றும்
நீ கோபப்பட
நான் பார்த்து இரசிப்பேன்!

சிந்தும் கண்ணீரும் உனக்காக
என்றென்னும்
பொழுது
மகிழ்ச்சியாக இருக்கிறது!

அழகாக நீ சிரிக்கும்
பொழுது
உன்னை ஆயுள்
முழுவது
சிரிக்க வைக்க ஆசைப்படுகிறேன்!

உனக்காக நான்
என்றும் காத்திருக்கேன்
ஆனால் நீயில்லாமல்
தனித்திருக்க முடியாது!

என் பிள்ளையை சுமந்தாய்
என்னை இருளில் தள்ளினாய்
வழியில்லை எனக்கு!

உன் சொல்லை நான் என்றும்
தவிர்த்ததில்லை….!

ஆதலால்
உலகை பிரியாமல்

உன் நினைவை சுமக்கிறேன்
இறுதிவரை.