யாழ் வீதியில் இரத்தம் வரும் வரை இளைஞன் மீது தாக்குதல்!!

யாழ் வீதியில் இரத்தம் வரும் வரை இளைஞன் மீது தாக்குதல்!!

jaffna01 jaffna02

நல்லுார் சங்கிலியன் வீதியில் கன்று ஈன்று ஒரு சில நாட்களேயான பசு மாடு ஒன்றினை இறைச்சிக்காக கடத்த முயன்ற இளைஞன் ஒருவரை அப் பகுதி இளைஞர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை இந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவருடன் வந்த இன்னொருவர் தப்பி ஓடிய நிலையில் இன்று காலை இவரது மனைவி இவரை இளைஞர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முயன்றதாகத் தெரியவருகின்றது.

அங்கு வந்த பொலிசாரால் இவர் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பசுமாடுகளை அதுவும் கன்று ஈனும் நிலையில் உள்ள மாடுகளைக் கூட இவ்வாறான பாதகர்கள் ஈவிரக்கம் பாராது கொலை செய்து இறைச்சிகளை எடுப்பதால் குடாநாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இந்த இளைஞனிற்கு வளங்கப்பட்ட தண்டனைகுறித்து அருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முதியவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

யாரையும் தாக்கும் உரிமை எமக்கு இல்லாத போது இரத்தம் வருமளவிற்கு தாக்கியிருக்கக் கூடாது.கோபம் வருவது சகஜம் தான் அதற்காக உங்கள் தாக்குதலில் அவர் பலியானால் உங்கள் எதிர்காலமும் கேள்விக்குறியாகும்.

ஏனெனில் மிருக வதையையை விட மனித வதைக்கே நமது நாட்டில் தண்டனை அதிகம்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply