யாழ்ப்பாணம், சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கியதில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

அப்பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தையொட்டி, நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு வீட்டில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே, இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது.

இன்று சனிக்கிழமை (08) காலை, உறவினர்கள் அவ்வீட்டுக்குச் சென்றபோதே சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை, சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்