இந்துக்கள் மொட்டை அடிப்பதற்கான காரணம்

இந்துக்கள் மொட்டை அடிப்பதற்கான காரணம்

மொட்டை அடித்தல், உபநயனம், திருமணம் போன்ற எண்ணிலடங்காத சடங்குகள் இந்து மதத்தில் உள்ளன. பிறந்தது முதல் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இந்துக்களும் இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டியிருக்கின்றது. இந்த சடங்குகளும், பண்பாடுகளும் இந்து மதத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

தலையை மொட்டையடித்து கொள்வது என்பது பல இந்துக்கள் பின்பற்றி வரும் ஒரு முக்கியமான சடங்காகும். பிறப்பு மற்றும் மறுபிறவி மீது இந்துக்களுக்கு நம்பிக்கை உண்டு. கடந்த ஜென்மத்தில் இருந்த பந்தங்களின் தொடர்பை துண்டிப்பதற்காகவே குழந்தைகளுக்கு முதல் மொட்டை போடப்படுகிறது.

அப்படி தலையை மொட்டை அடிப்பதால் அக்குழந்தை இந்த பிறப்பில் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கின்றது. அதனால் இது ஒரு முக்கியமான சடங்காக பார்க்கப்படுகிறது. தலைமுடி என்பது பெருமை மற்றும் ஆணவத்தை குறிக்கும் ஒன்றாக கருதப்படுகின்றது.

அதனால் தலைமுடியை மொட்டை அடித்து கொள்வதன் மூலம், நாம் கடவுளிடம் சரணாகதி அடைகிறோம். தலைமுடியை மொட்டை அடிப்பதன் மூலம் நம் தலைக்கனத்தை இழந்து, கடவுளுக்கு அருகில் வருகிறோம். இது பணிவை எடுத்துக்காட்டும் ஒரு செயலாக கருதப்படுகின்றது.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply