ஒளி பயணம் செய்யும் வேகத்தை படம் எடுக்கும் அதிவேக கெமரா கண்டுபிடிப்பு

ஒளி பயணம் செய்யும் வேகத்தை படம் எடுக்கும் அதிவேக கெமரா கண்டுபிடிப்பு

ஒளி பயணம் செய்யும் வேகத்தை படம் எடுக்கும் அதிவேக கெமராவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சுவீடனில் உள்ள லுண்டு பல்கலைக்கழகத்தின் எலியாஸ் கிறிஸ் டென்ஸ்சன் தலைமையிலான குழுவினர் அதிவேக கெமராவை உருவாக்கியுள்ளனர்.

இந்த கெமரா மூலம் ஒளியின் பயணத்தை படம் எடுக்க முடியும்.

இந்த கெமரா மூலம் ஒரு வினாடிக்கு 1 இலட்சம் புகைப்படங்களை எடுக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒளியின் பயணத்தை படம் எடுக்கும் போது அதில் இருந்து வெளியாகும் பல ஒளிகள் ஒன்றிணைந்து ஒரு புகைப்படமாக வெளியாகிறது.

விலங்குகளின் மூளை செயல்பாடு, குண்டு வெடிப்பு, வேதியியல் பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் இந்த கெமரா மூலம் படம் எடுக்க முடியும் என நிபுணர் எளபாஸ் கிறிஸ்டென்சன் கூறியுள்ளார்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply