பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானை நியமிக்க வேண்டும் என்றும், அவர் அந்த பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார் என்றும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்பிளேவும், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சர் பாங்கரும் உள்ளனர். பந்து வீச்சு பயிற்சியாளர் பதவி காலியாக உள்ளது.

இந்த நிலையில் பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானை நியமிக்க வேண்டும் என்றும், அவர் அந்த பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார் என்றும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முன்பு ஒரு முறை ஜாகீர்கான், ‘எனக்கும் அதில் விருப்பம் உள்ளது. ஏற்கனவே அத்தகைய பணிகளை நான் மேற்கொண்டிருக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.