ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்: இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டியுள்ள சிங்கப்பூர்

ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்: இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டியுள்ள சிங்கப்பூர்

இயற்கை அனர்த்த சூழ்நிலையில் இலங்கைக்குக் கைகொடுக்கும் வகையில் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை சிங்கப்பூர் உதவியாக வழங்கவுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். சுமார் ஐந்து இலட்சம் பேர் இந்த இயற்கை அனர்த்தத்தால் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூர் அரசு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க முன்வந்துள்ளது. இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் முறையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளனர்.

மேற்படி கடிதங்களில், இலங்கையின் தற்போதைய நிலை குறித்து வருந்துவதாகவும், இலங்கை மக்கள் நிச்சயம் இந்த கடுமையான சூழலில் இருந்து மீண்டெழுவார்கள் எனத் தாம் நம்புவதாகவும், அதற்காக தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிதி திரட்டும் முயற்சியிலேயே இந்நிதி திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply