இண்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும் அதே நேரத்தில் பாலியல் தொடர்பான இணைய தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கணினி மற்றும் இண்டர்நெட்டால் நன்மைகள் பல இருந்தாலும் பெற்றோர்களை பெரிதும் வாட்டி எடுப்பது பாலியல் இணைய தளங்கள்தான். குழந்தைகள் இந்த இணைய தளங்களை பார்வையிடக் கூடாது என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவது இயல்பு. ஆனால் பலருக்கு இந்த தளங்கள் வராமல் எப்படி தடுப்பது என்று தெரியவில்லை. இணையத்தில் அதற்கு பல வழிகள் உள்ளன.

இண்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும் அதே நேரத்தில் பாலியல் தொடர்பான இணைய தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வீடுகளிலும், பள்ளிகளிலும் இது போன்ற பாலியல் தளங்களையும், ஏமாற்றும் தளங்களையும் அடையாளம் கண்டு குழந்தைகளை பாதுகாப்பது என்பது சிரமமான காரியமாக உள்ளது.

இணையத்தில் கே9 வெப் புரடெக்‌ஷன் (K9 Web Protection) என்ற பெயரில் இது போன்ற தளங்களை வடிகட்டும் சாப்ட்வேர் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் தளத்தில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை எப்படி டவுன்லோடு செய்து பயன்படுத்துவது என்று படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.

முதலில் http://www.k9webprotection.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இந்த சாப்ட்வேர் புரோகிராமினை டவுன்லோடு செய்திடுங்கள். டவுன்லோடு செய்திடும் முன் உங்கள் பெயர், முகவரி போன்ற பெர்சனல் தகவல்கள் கேட்கப்பட்ட படிவம் ஒன்றினை நிரப்பி இணையத்தில் அனுப்ப வேண்டும். பின்னர் கே9 தளம் நீங்கள் தந்த இ-மெயில் முகவரிக்கு ஒரு அஞ்சல் அனுப்பும். அதில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்த ஒரு கீ தரப்படும்.

சாப்ட்வேர் தொகுப்பினை டவுன்லோடு செய்த பின், அதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும். இந்த புரோகிராம் தானாகவே பாலியல் தகவல்கள் கொண்டுள்ள தளங்களைத் தடுத்து விடுகிறது. இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தளம் இடம் பெற்றால், அதனை அந்த பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். தடை செய்யக் கூடிய பொருட்கள் குறித்த பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

கே 9 வெப் புரடெக்‌ஷன் சாப்ட்வேர் இந்த வகையில் மிகவும் பயனுள்ள புரோகிராமாக உள்ளது. குழந்தைகள் மோசமான தளங்களைப் பார்ப்பதிலிருந்து இது தடுக்கிறது.