பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு 100 மன நோயாளிகளை கூட்டிட்டு வரணும்” – கஞ்சாகருப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு 100 மன நோயாளிகளை கூட்டிட்டு வரணும்” – கஞ்சாகருப்பு!

நடிகர் கமல் ஹாசனை வைத்து பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது தனியார் தொலைக்காட்சி ஒன்று. இந்நிகழ்ச்சி ஒளிபரப்பும் முன் ஏகப்பட்ட விளம்பரங்களின் மூலம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. பாலிவுட்டில் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி அளவுக்கு எதிர்பார்த்து தமிழிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கினர்.

ஆனால் அந்த எதிர்பார்ப்பின் பாதி அளவை கூட இந்நிகழ்ச்சி பூர்த்தி செய்ய வில்லை என்றவாறு பலர் தெரிவிக்கின்றனர். இந்நிகழ்ச்சியின் மூலம் தமது TRP ஏற்றிக்கொள்ளவே அந்த தொலைக்காட்சி முயல்வதாகவும் கருத்து நிலவுகிறது.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கஞ்சாகருப்பு பேசியபோது, ‘இந்த பிக்பாஸ் வீடு மனநிலை சற்று சரியில்லாதவர்களையும் சரிப்படுத்திவிடும், இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஊரில் உள்ள ஒரு 100 மன நோயாளிகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு வரணும்’ என்று கூறினார்.

மேலும் தான் அனைவரையும் இங்கு சிரிக்க வைத்து கொண்டிருந்தாலும் தனது குழந்தைகள், அம்மா எப்படி இருக்கின்றார்களோ என்ற கவலை தனக்கு உள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply