பிரபாகரனை விஞ்சுவதற்கு முயற்சிக்கும் விக்னேஸ்வரன்

பிரபாகரனை விஞ்சுவதற்கு முயற்சிக்கும் விக்னேஸ்வரன்

தமிழ் மக்களிடத்தில் பிரபலமாகும் நோக்கிலேயே வடமாகாண முதலமைச்சர் நாட்டைப் பிளவுபடுத்துவது குறித்து பேசுகின்றார். சிறிது காலங்களுக்கு முன்னர் அவரும் கொழும்பில் இருந்துதான் அரசியல் செயற்பாடுகளை பார்த்தார்.

நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்று அவர் நினைப்பாராயின் அது கனவாக மாத்திரமே இருக்கும். ஒற்றையாட்சியே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சர் எஸ் பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

வடக்கு முதல்வர் கொழும்பின் பார்வை தீர்வுக்கு உதவாது எனக் கூறியதற்கு கருத்து தெரிவிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டி6ல் வாழும் மூவின மக்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து ஒற்றையாட்சியின் கீழ் அந்த மக்கள் தமது உரிமைகளுடன் சுதந்திரமாக வாழவே அரசாங்கம் செயற்படுகின்றது.

அதற்கான முதற்கட்ட முன்னெடுப்பாக அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வடக்கு முதல்வரிடமிருந்து இவ்வாறான கருத்துகள் வெளிப்படுகின்றன.

வடக்கு முதல்வரின் கருத்துகளை தமிழ் மக்களின் நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் அதை விரும்பவும் மாட்டார்கள்.

வடமாகாண முதல்வர் தனி ஈழம் ஒன்றை அமைக்கும் கனவில் இருக்கின்றார். அவர் தமிழ் மக்களிடத்தில் பிரபலமாகி பிரபாகரனின் பெரியப்பாவாகவே முயற்சித்து வருகிறார். அவர் கொழும்பின் பார்வை தவறு என்று கூறுவதை ஏற்க முடியாது.

எனவே சமஷ்டி ஆட்சி முறையினைக் கருத்திற் கொண்டு செயற்படாமல் எமது நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றே அரசாங்கம் நினைக்கிறது.

அதற்கு மாறாக நாட்டைப பிரிக்க வேண்டுமென வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நினைப்பாராயின் அது கனவாக மட்டுமே இருக்கும் என்றார்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply