சூதாட்ட கிளப்பில் ரஜினி: சர்ச்சை புகைப்படம்

11

அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ள ரஜினி சூதாட்ட கிளப்பில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காலா, 2.0 படங்களில் நடித்து வரும் ரஜினி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு சூதாட்ட கிளப் ஒன்றில் ரஜினி அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி, மாநில அரசின் வரியால் தமிழ் திரையுலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் ரஜினியின் இந்த புகைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.