உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் தொகுப்பாளினி பாவனா

10

பொலிவுட்டில் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது பிரபல தொலைக்காட்சியில் தமிழில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதில் 15 பிரபலங்கள், 30 கேமிராக்கள், 100 நாட்கள், ஒரே வீட்டில் எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் கட்டுப்பாடு.

இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கிண்டலடித்தாலும் ரசிகர்களால் இன்று அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி பாவனா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் போது, என் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

எனக்கு நிகழ்ச்சி பிடித்திருக்கிறதா இல்லையா என தெரியவில்லை. ஆனால் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.