புதிய அரசியலமைப்பிற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஐக்கியத்துடன் செயற்படுதல் அவசியமாகும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியினரும் சிறுபிள்ளைத்தனமாக தம்மை வசைபாடி வருவதாகவும், இதனைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்ட அவர் எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ் தலைமைகள் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொண்டிருந்தால், அது கடும்போக்கு பௌத்த சிங்களவர்களுக்கு சாதகமாகிவிடும் என்றும் குறிப்பிட்டார்.