இந்தியாவுடன் பேச்சுக்கே இடமில்லை; நேரா அடிதான்- சீனா.!

இந்தியாவுடன் பேச்சுக்கே இடமில்லை; நேரா அடிதான்- சீனா.!

சிக்கிம் செக்டாரில் முச்சந்திப்பாக (இந்தியா – திபெத்- பூடான்) உள்ள டோக்லாமில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளது.

இந்தியா மற்றும் பூடான் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இந்திய ராணுவம், சீனா ராணுவத்தின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி உள்ளது.

இந்தியாவும் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளது. சீனாவும் ராணுவத்தை குவித்து உள்ளது.

இந்தியா தன்னுடைய ராணுவத்தை எல்லையில் இருந்து திரும்ப அழைக்க வேண்டும் எனவும், அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும் சீனா தரப்பில் தினசரி ஒரு அறிக்கையை வெளியிடப்பட்டு வருகிறது.

இந்தியா தரப்பில் எல்லைப் பிரச்சனையை அமைதியாக தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம், ராணுவத்தை திரும்ப பெற மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுவிட்டது. எல்லையில் பதட்டமான நிலையே நீடிக்கிறது.

இந்நிலையில், சீனாவின் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனமான ஜின்குவா, “இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை, இந்தியா தன்னுடைய பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சங்கடத்தை எதிர்க்கொள்ளும், நிலையானது மீண்டும் மோசமடையும்” என குறிப்பிட்டு உள்ளது.

சீனாவின் இத்தகைய அறிவிப்பின் காரணமாக எல்லைப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply