எதிர்வரும் நவம்பர் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

3465

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேர்தலில் உறுப்பினர் தெரிவானது 60 வீதம் தொகுதிவாரி முறையிலும், 40 வீதம் விகிதாசார முறையிலும் இடம்பெறுவதற்கும் கலந்துரையாடப்பட்டுள்ளது.