டெனீஸ்வரனின் அமைச்சு யாருக்கு? – ரெலோவின் பரிந்துரை இன்று

டெனீஸ்வரனின் அமைச்சு யாருக்கு? – ரெலோவின் பரிந்துரை இன்று

வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பதவி.யில் இருந்து, டெனீஸ்வரனை நீக்கியதும் யாரை அமைச்சராக பரிந்துரைப்பது என ரெலோ இன்று தனது பரிந்துரையை முதலமைச்சருக்கு அனுப்பவுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ரெலோ தலைவர், செல்வம் அடைக்கலநாதன், கட்சி விதிமுறைகளை மீறி வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் செயற்பட்டு வருவதால், அவரை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறு வட மாகாண முதலமைச்சருக்கு எமது கட்சி பரிந்துரைத்திருந்தது.

அமைச்சர் டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்கும் பட்சத்தில் எமது கட்சியின் சார்பில் யாரை அமைச்சராக நியமிக்க பரிந்துரைப்பது என்பது தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று கட்சியின் அரசியல்குழு கூடி ஆராய்ந்தது.

எனினும் இக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படாமையினால் இன்று அனைத்து அரசியல்குழு உறுப்பினர்களும் தொலைபேசி மூலமாக தமது தெரிவுகளை தெரிவிப்பது எனவும் அதன் பின்னர் உடனடியாக முதலமைச்சருக்கு ரெலோ கட்சியின் சார்பில் புதிய அமைச்சருக்கான நபரை பரிந்துரைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply