தமிழரசு கட்சியானது தொடர்ந்தும் பல தவறுகளை விட்டுக் கொண்டிருக்கிறது-சித்தார்த்தன்

தமிழரசு கட்சியானது தொடர்ந்தும் பல தவறுகளை விட்டுக் கொண்டிருக்கிறது-சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக் கூடியவர்கள் மத்தியில், நிச்சயமாக பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. குறிப்பாக மாகாண சபையில் இருக்கின்ற குழப்பம். எங்கோ இருந்த விக்னேஸ்வரன் ஐயாவை நாங்களே கொண்டு வந்தோம்.

தமிழரசுக் கட்சி அவருக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருவதன் மூலம், தன் கட்சி ஒன்று தானே தன்னுடைய முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் நிகழ்வு வேறு எங்கும் நிகழ்ந்ததாக நான் அறியவில்லை.

தமிழரசுக் கட்சி தன்னுடைய மேலாண்மையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் பல பிழைகளை விட்டுக் கொண்டிருக்கிறது பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply