மின்னல் வாள்வெட்டுக் கும்பலால் தொடரும் வாள்வெட்டுக்கள், புது புது பெயரில் உருவாகும் கும்பல்.   யாழில் பதற்ற சூழ்நிலை  நிலவுகின்றது.

நீண்டகாலமாக தலைமறைவாகியிருந்த மின்னல் என்ற வாள்வெட்டுக் கும்பலே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சுன்னாகம் தொட்டியாலடி பகுதியில் மூவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இந்த இனந்தெரியாத குழுவினர் சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மூவரில் இருவர் தெல்லிப்பளை வைத்தியசாலையிலும், ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டு நடத்தியவர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை விரைவில் கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் சுன்னாகம் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.