பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து நடிகை ஓவியா நேற்று முதல் போராடி வருகிறார். நேற்று மழையில் படுத்து தூங்கிய அவரை மற்றவர்கள் சமாதானபடுத்தி உள்ளே அழைத்து வந்தனர்.

அடுத்த நாள் சாப்பிடாமல் இருந்த அவர், பிக்பாஸ் தன்னை அழைத்து பேசும்படி கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இன்று ஓவியா தற்கொலை முயற்சி செய்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

இது வதந்தி, ஓவியா தற்கொலை முயற்சி செய்யவில்லை ஆனால் வீட்டை விட்டு எவ்வளவு விரைவில் வெளியேற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேறவேண்டும் என்ற முனைப்பில் அவர் செயல்படுகிறார் என விஜய் டிவி தரப்பில் இருந்து விளக்கம் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.