பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆறு பேர் அதிரடியாக கைது!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆறு பேர் அதிரடியாக கைது!

யாழ். கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஆறு பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு தலைமை தாங்கிய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஆறு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷேட அதிரடிப் படையினர் இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட நபர்களின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என எமது  செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 6ஆம் திகதி யாழ். கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த வாள்வெட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் முன்னாள் போரளி என பொலிஸ்மா அதிபர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply