முப்படைகளின் துனையுடன் பௌத்தர்களே இல்லாத இடத்தில் பௌத்த விகாரைகள் -சுரேஷ் பிரேமசந்திரன்!

முப்படைகளின் துனையுடன் பௌத்தர்களே இல்லாத இடத்தில் பௌத்த விகாரைகள் -சுரேஷ் பிரேமசந்திரன்!

முப்படைகளின் துனையுடன் பௌத்தர்களே இல்லாத இடத்தில் பௌத்த விகாரைகள், புத்த சிலைகளை நிர்மாணிக்கின்றனர் என மனு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்ற உலக சைவ இளைஞர் மாநாட்டில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

ஒரு இனத்தை அழிப்பதற்கு பல்வேறுபட்ட உத்திகள் கையாளப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழ் மக்கள் தமது உரிமைகளை, தமது சமயத்தை, கலாச்சாரத்தைபாதுகாப்பதற்காக நீண்டகாலமாக போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சைவ மாநாட்டை நடாத்துகின்ற அதே நேரத்தில் இந்த அரசாங்கமானது பல்வேறுபட்ட வழிமுறைகளில் தமிழ் மக்களின் கலாச்சாரத்தை, சமயத்தை அழிப்பதற்கு முயற்சிற்றுக் கொண்டிரூக்கிறது.

விஜயன் நாட்டிற்கு வரும் போது நாட்டிலே ஐந்து சிவாலயங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது அந்த ஈஸ்வரங்களுக்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது தெரியவில்லை. கோனேஸ்வர ஆலயத்திற்கு முன்னாள் பாரிய புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் பௌத்த மதத்தை காப்பாற்றுவது என்பது வேறு பிறிதொரு மதத்தை அழித்து ஒரு மதத்தை காப்பாற்றுவது என்பது வேறு.

பல நூற்றுக்கணக்கான சைவ ஆலயங்கள் குண்டுவீசி தகர்க்கப்பட்டிருக்கின்றன. இன்று அந்த ஆலயங்கள் சிறுக சாறுக புனரூத்தான வேலைகளை செய்கின நிலையில் முப்படைகளின் துனையுடன் பௌத்தர்களே இல்லாத இடத்தில் பௌத்த விகாரைகள் புத்த சிலைகளை நிர்மாணிக்கின்றனர்.

யுத்தத்திற்கு பின் நாவற்குழியில் சட்டவிரோதமான முறையில் குடியேற்றப்பட்ட சிங்கள குடியேற்றத்தோடு அங்கு பிரமாண்டமான பௌத்த கோவிலை கட்டுவதற்கு இராணுவத்தினர் அடிக்கல் நாட்டியிருந்தனர்.

எனினும் இது வழக்கு தாக்குதல் செய்த போது சாவகச்சேரி நீதவான் இலங்கையில் பௌத்தம் முதன்மையானது எனவே அங்கு பௌத்த விகாரையை கட்டலாம் எர தீர்ப்பு வழங்கி இருந்தார்.

பௌத்தம் முதன்மையானது என்பதற்காக பௌத்தர்கள் இல்லா பிரதேசத்திலே பௌத்தத்தை தினப்பதால் தமிழர்களின் கலாச்சார பிரழ்வு , நாகரிக அழிப்பு என்பன நிகழக்கூடும்.

கன்னியா வெண்ணீர் உற்று இராவணால் உருவாக்கப்பட்டதென்று சொல்லப்படுகிறது.

ஆனால் இன்று பௌத்த பிரச்சாரம் மேற்கொள்ளும் இடமாக மாற்றப்பட்டிருக்கிறது.

இலங்கை சிவ பூமி என்று அழைக்கப்பட்டாலும் தற்போது வடக்கு கிழக்கிலே தமிழர்களும் சைவர்களும் அதிகம் வாழ்கின்ற போதும் அம்பாறையும் திருகோணமலையும் பௌத்த மயமாக்கப்பட்டு விட்டநு தற்போது வடக்கையும் பௌத்த மயமாக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என தெரிவித்தார்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply