மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் பிறந்த நாள் இன்று

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் பிறந்த நாள் இன்று

இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் வழக்கறிஞருமான இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் மகனாவர். மாமனிதர் குமார் பொன்னம்பலம் 2000, சனவரி 5 இல் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் பேரினவாத இனவெறியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம், வடமராட்சியில் ஜி. ஜி. பொன்னம்பலம், அழகுமணி ஆகியோருக்குப் பிறந்தவர் குமார். யாழ்ப்பாணம் அரச அதிபராக இருந்த முருகேசம்பிள்ளை என்பவரின் மகள் யோகலட்சுமியை மணந்தார். தந்தையைப் போலவே இவரும் சட்டம் பயின்று பாரிஸ்டர் ஆகி வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இவரின் மும்மொழி அறிவு தென்னிலங்கையில் இருந்தே புலிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான ஆதரவு என்பன இலங்கை அரசினால் உரிமைகள் மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பல தமிழ் மக்களுக்காக வாதாடினார்.

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டார். அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் பணம் வாங்காமல் சேவை அடிப்படையில் வாதாடினார்.

எவ்விடத்திலும், தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டு வந்தார். தமிழீழ விடுதலை புலிகள் மேலும் தமிழ் மக்கள் மேலும் மிகுந்த பற்றுறுதி கொண்டிருந்ததனால் இதனால் இனவெறியரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இறந்த பின்னர், விடுதலைப் புலிகள் இவருக்கு மாமனிதர் விருது வழங்கி மதிப்பளித்தனர்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply