வவுனியாவில் அவசரமாக கூடியது ரெலோ

வவுனியாவில் அவசரமாக கூடியது ரெலோ

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ கட்சி முக்கிய தீமானங்களை எடுக்கும் நோக்கில் இன்று வவுனியாவில் கூடியுள்ளது.

வவுனியா – வைரவபுளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

கூட்டத்தில் வட மாகாண அமைச்சராக உள்ள ரெலோ கட்சியை சேர்ந்த பா. டெனிஸ்வரன் தொடர்பில் தீர்க்கமான முடிவினை எடுக்கவுள்ளதாகவும், சம கால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக அக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இந்து நிலையில் கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் வெளிநாட்டு அலுவலக பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply