பிரதேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள உயர்தர மாணவி..!

பிரதேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள உயர்தர மாணவி..!

கலேவெல பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் சிறிய குடிசை ஒன்றில் தனிமையாக வாழ்ந்து வரும் சம்பவம் ஒன்று பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தனது சிறிய வயதிலே தனது தந்தையை இழந்துள்ளதுடன், தாய் மகளை விட்டுச் சென்றுள்ள நிலையில் மாணவி யாரும் இல்லாமல் தனது வாழ் நாளை தனிமையில் கழித்துள்ளார்.

தந்தையை இழந்த பின்னர் பெரும் பிரச்சினைகளை அவர் தனிமையாக எதிர் நோக்கியுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. கூலி வேலை செய்து தனது கல்வி நடவடிக்கையையும் வாழ் நாளையும் கழித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியை அறிந்த நகர்ப்புற அதிகாரிகள் மற்றும் கலேவெல செயலாளர் பிரிவு காரியால அதிகாரிகள் மாணவியை சந்திக்கச் சென்றுள்ளனர். இதற்கமைய சிறிய குடிசைக்கு பதிலாக பூரணமான வீடு ஒன்றை மாணவிக்கு பெற்றுக் கொடுப்பதற்கு இவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன் நிலையில் மாணவி வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தனது எதிர்பார்ப்பு எதிர்காலத்தில் ஓர் ஆசிரியராக பணி புரிவதே என மாணவி குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply