பேசாலை கடற்கரையில் நீதவான் முன்னிலையில் அகழ்வு!

பேசாலை கடற்கரையில் நீதவான் முன்னிலையில் அகழ்வு!

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை)  மீனவரொருவரின் குடிசையில் இனம்தெரியாத பொருட்கள் புதைத்து காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்பைடையில்  அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் – பேசாலை கடற்கரைப் பகுதியில் உள்ள மீனவரொருவரின் குடிசையில்  இனம்தெரியாத பொருட்கள் புதைத்து காணப்படுவதாக பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

mnp1

mnp2

mnp3

mnp4

பேசாலை 4 ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் குடிசை ஒன்றினுள் இனம் தெரியாத பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை தொடர்ந்து பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று விசாரணையினை மேற்கொண்டனர்.

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் கடந்த 8ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு, நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அங்கு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், அகழ்வின் போது ஒரு சில உலோகப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்ட போதும், சந்தேகத்திற்கிடமான எவ்வித பொருட்களும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டன. எனவே, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply