எரிமலைகள் வெப்பமான பிரதேசத்தில் மட்டுமல்ல ஆழ் கடல்களிலும், பனிப்பிரதேசங்களிலும் காணப்படக்கூடிவை.

இவ்வாறு அதிக குளிர் நிறந்து காணப்படும் அந்தாட்டிக்கா பகுதியில் இதுவரை இனங்காணப்படாத 138 வரையான எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை பனிப் படலங்களுக்கு அடியில் மறைந்து காணப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் செயற்பாட்டு நிலையில் உள்ளனவா என்பது தொடர்பில் சரியான தரவுகள் எதுவும் இல்லை எனவும் Edinburgh பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானியான Robert Bingham தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த எரிமலைகள் 100 மீற்றர்கள் ஆழத்திலிருந்து 3,850 மீற்றர்கள் ஆழங்களில் அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.