இனிமேல் எக்ஸ்ரே, ஸ்கேனுக்கு அவசியம் இருக்காது: மருத்துவக் கெமரா வந்துவிட்டது

இனிமேல் எக்ஸ்ரே, ஸ்கேனுக்கு அவசியம் இருக்காது: மருத்துவக் கெமரா வந்துவிட்டது

உடல் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்து, நோயின் தன்மையைக் கண்டறிய எக்ஸ்ரே, ஸ்கேன் ஆகியவற்றைத்தான் மருத்துவர்கள் நம்பியுள்ளனர்.

இந்த நடைமுறையால் நோயாளிகள் ஆயிரக்கணக்கில் செலவிடவேண்டியுள்ளது.

இனிமேல், அதற்கு அவசியமின்றி, உடலை ஊடுருவிப் பார்த்து நோயின் தன்மையைக் கண்டறிய மருத்துவ கெமரா வந்து விட்டது.

இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறியல் பேராசிரியரான விஞ்ஞானி கெவ் தாலிவால் தலைமையிலான குழு, இந்த கெமராவைக் கண்டுபிடித்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவ் தாலிவால் கூறியிருப்பதாவது,

உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் போன்ற மருத்துவ சாதனங்களை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், எண்டோஸ்கோப்பை உடலுக்குள் செலுத்திய பிறகு, அதன் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து, சரியான இடத்திற்கு நகர்த்த எக்ஸ்ரே-யைத்தான் மருத்துவர்கள் நாட வேண்டியுள்ளது. ஆனால், இந்த கெமரா, எண்டோஸ்கோப் இருப்பிடத்தை சரியாகக் காட்டி விடும். அதற்கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிலிக்கான் சிப் கெமராவில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனுக்கு அவசியம் இருக்காது

Print Friendly

NO COMMENTS

Leave a Reply