உதயன் நாளிதழிடம் 500 மில்லியன் ரூபா கேட்கிறார் வடக்கு விவசாய அமைச்சர்!

உதயன் நாளிதழிடம் 500 மில்லியன் ரூபா கேட்கிறார் வடக்கு விவசாய அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் இருந்ர் வெளிவரும் உதயன் நாளிதழிடம் 500 மில்லியன் (50கோடி) ரூபா இழப்பீடு கோரி வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் மானநஷ்ட வழக்குத் தொடுத்துள்ளார்.

தற்போது விவசாய அமைச்சராக இருக்கும் சிவனேசன் சிவராம் படுகொலையுடன் தொடர்புபட்டவர் என்றும், போதைவஸ்து கடத்தலுடனும் தொடர்புபட்டவர் எனவும் உதயன் செய்தி வெளியிட்டிருந்தது.

இக்காரணங்களைக் குறிப்பிட்டு, இவ்விவகாரங்களில் தன்னைக் குறிப்பிட்டு திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக, வடக்கு விவசாய அமைச்சர் சட்டத்தரணியூடாக கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன் 30 நாட்களுக்குள் 500 மில்லியன் ரூபா பணத்தினைச் செலுத்தாவிட்டால் நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply