சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் நேற்று நியூயோர்க்கில் முதல்முறையாகச் சந்தித்தனர்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள உலகத் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று வரவேற்பு அளித்தார்.

இதன்போதே,  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதற் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோருடன் சிறிலங்காஅதிபர் மைத்திரிபால சிறிசேனவும், முதற்பெண்மணி ஜெயந்தி சிறிசேனவும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.