படை­யி­ன­ருக்குத் தேவை­யான நவீன உப­க­ர­ணங்­களை வழங்கி தேசி­யப் பாது­காப்பை மேலும் உறுதி செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று பதில் பாது­காப்பு அமைச்­சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித்­தார்.’

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடு­கள் பொதுச் சபைக் கூட்­டத்­தில் பங்­கேற்­ப­தற்­காக அமெ­ரிக்­கா­வுக்குச் சென்­றுள்­ளார்.

இந்­தக் காலப் பகு­தி­யில் பாது­காப்பு பதில் அமைச்­ச­ராகக் கட­மை­யாற்­று­மாறு எனக்­குப் பணிப்­புரை விடுத்­தார். என் மீது கொண்ட நம்­பிக்­கை­யால் பதில் பாது­காப்பு அமைச்­சர் பத­வியை அரச தலை­வர் வழங்­கி­யுள்­ளார்.

எனக்கு வழங்­கப்­பட்ட பொறுப்பை உரிய முறை­யில் நிறை­வேற்­று­வதே எனது இலக்­கா­கும். நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­டும் நபர்­களைக் கைது செய்­யும் பொறுப்பு பொலி­ஸா­ரைச் சாரும். அவ்­வாறு வடக்­கி­லும், கிழக்­கி­லும் குற்­றச் செயல்­க­ளில் ஈடு­பட்ட பெரும் எண்­ணிக்­கை­யி­லா­ன­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இவ்­வா­றான விட­யங்­கள் தேசி­யப் பாது­காப்புக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யாது என்­றார்.