குடும்பஸ்த்தர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று நேற்று முன்தினம் (19.09.2017) அனுமதி வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதிப்பகுதியில் நேற்று முன்தினமிரவு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் பொல்லுகள் சகிதம் வந்த 07 இளைஞர்கள் அடங்கிய குழுவினரால் அப்பகுதியை சேர்ந்த செல்வநாயகம் இரத்தினபாலசிங்கம் என்பவரும் அவருடைய மகனும் கடுமையாக தாக்கப்பட்டதுடன் அவர் அந்தக் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

நேற்று முன் தினம் அவர் நல்லூர் பண்டாரிக்குளம் பிள்ளையார் கோயில் தேர் முட்டி அருகில் குற்றுயிராக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

அவருடைய கொலை தொடர்பாக பருத்தித்துறை வீதி, நல்லூரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு நேற்றிரவு நீதிவானிடம் முற்படுத்தப்பட்டனர்.