இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்கமாட்டோம் பாகிஸ்தான் பிரதமர்

இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்கமாட்டோம் பாகிஸ்தான் பிரதமர்

தேவைப்பட்டால் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்கமாட்டோம் என்றுக் கூறி பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நியூயார்க்கில் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான கவுன்சில் ஒன்றில் பேசிய பிரதமர் ஷாஹித், இந்தியாவின் அண்மைக்கால விமர்சனங்கள் பாகிஸ்தானை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளன என்றார்.

குறுகிய தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தயாராக வைத்திருக்கிறது என்ற அவர், இந்திய தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவற்றை பிரயோகப்படுத்தப்போவதாகவும் அசட்டுத் துணிச்சல் காட்டியுள்ளார்.

ஐ.நாவில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் பிரதிநிதிகளுடன் நடத்திய முத்தரவு பேச்சுவார்த்தையில் வடகொரியாவுக்கு பாகிஸ்தான் அணு ரகசியங்களை விற்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டினார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் அப்பாஸி இப்படி பேசியுள்ளதாக தெரிகிறது.

வட கோரிய மட்டுமே அணு ஆயுத மிரட்டல்களை விடுத்து வரும் நிலையில், இந்தியாவின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply