மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கின?

மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கின?

மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

மூத்த பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் (55) கடந்த செப்டம்பர் 5-ம் திகதி இரவு பெங்களூருவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கில் துப்பு கொடுப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மேலும் கொலையாளிகளைப் பிடிக்க உளவுப் பிரிவு ஐஜிபி பி.கே.சிங் தலைமையில் 21 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது.

அதில் கர்நாடகாவில் கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் இருவரும் 7.65 எம்எம் வகை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி, தோட்டா உட்பட கொல்லப்பட்ட நால்வரின் வழக்குக்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கௌரி லங்கேஷ் கொலை தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறும்போது, ‘கௌரி லங்கேஷ் வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது. இந்தக் கொலையின் பின்னால் யார் இருக்கிறார்கள் என ஊடகங்களுக்கு தெரியும். கொலையாளிகள் யார் என்பதை உறுதி செய்வதற்கான முக்கிய ஆதாரம் சிக்கியுள்ளது.

அனைத்து ஆதாரங்களையும் உறுதி செய்த பிறகு, விரைவில் நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.

இதற்கிடையில் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டு ஒரு மாதம் ஆகியும், கொலையாளிகளை கைது செய்யாமல் இருப்பது ஏன் என எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக கன்னட எழுத்தாளர் கே. எஸ்.பகவான் கூறும் போது, கௌரி லங்கேஸ் சட்டுக் கொல்லப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது. இதுவரையிலும் குற்றவாளிகளை அரசு கைது செய்யாது வேடிக்கை பார்க்கின்றதென கூறியுள்ளார்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply