அரசியல் கைதிகளின் உறவினர்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரம் சிறைச்சாலை உட்பட தென்பகுதியில் உள்ள சிறைச்சாலைகள் அனைத்திலும் சுமார் 76 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுதலை செய்வதாக அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழரசுக் கட்சி உறுதிமொழி வழங்கியதாகவும் ஆனால் இதுவரை எவரும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக அனுராபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூன்று பேர் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மூன்று கைதிகள் மீதான வழக்கு விசாரணையை வவுனியா நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்து.

ஆனால் வழக்கு விசாரணையை அங்கு மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி மூன்று அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென கூறிய உறவினர்கள் யாழ் மாட்டீன் விதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராடவுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

காணாமல்போனவர்களின் உறவினர்களும் இந்தப் போராட்டத்தில் இணையவுள்ளதாக குறிப்பிட்டனர்.