அட்டைப்பெட்டிக்குள் ராணுவ வீர்களின் உடல்: அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படங்கள்

அட்டைப்பெட்டிக்குள் ராணுவ வீர்களின் உடல்: அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை காலையில் அருணாசல பிரதேசத்தில் இந்திய ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் சிதறிக்கிடந்த உடல்களை மீட்ட அதிகாரிகள் அவற்றை கிர்மு ஹெலிகாப்டர் தளத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து கொண்டுவரப்பட்ட வீரர்களின் உடல்கள் சாக்குகளில் மூடப்பட்டு அட்டைப்பெட்டிக்குள் பிணைக்கப்பட்டிருந்தது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்

இதுகுறித்து ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் ஹெச்.எஸ். பனாக் இந்த படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “நேற்று ஏழு இளைஞர்கள் தங்கள் தாயகத்திற்கு சேவை செய்ய, சூரிய ஒளிக்கு வெளியே சென்றனர். இப்படி தான் அவர்கள் வீட்டிற்கு வந்தனர்” என்று கூறினார்.

மேலும் வீரர்களின் உடல்களை அதற்கேற்ற சவப்பெட்டிகளில்(பைகள்) எடுத்து வரவில்லை எனவும் கூறி அதன் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ராணுவ வீர்களின் உடலுக்கு இவ்வளுவு தான் மரியாதையா என பலரும் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply